பக்கம்:செவ்வானம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 செவ்வாணம் சமயங்களில் தெருக்களில் வேலையில்லாமல் சுற்றினான். பிரயோசனமில்லை அவனுக்கே அலுப்பு ஏற்பட்டுவிட்டது. இனி அவளைப்பற்றி எண்ணுவதேயில்லை என்று தீர்மானித்தான். ஆனால் அவள் நினைவு தானாகவே தலைதூக்கும் அவன் மனதில், அவள் சிரிப்பு, அவள் பேச்சு, அவள் காட்சியளித்த அழகுத்தோற்றம் ஏதாவது அடிக்கடி அவன் நினைவில் எழும் தன்னால் அவளை மறந்துவிடமுடியாது என உணர்ந்தான் தாமோதரன். அவன் சிரமப்பட்டு அவளை மறந்துவிட்டாலும்கூட, மற்றவர்கள் அவ்விதம் நடக்கும்படி விட்டுவிட மாட்டார்கள் என்று தோன்றியது. நிலைமை மிஞ்சிவிட்டது என்பது அவனுக்கு நன்கு புரிந்தது. நிலைமை விஸ்வரூபம் பெற்றுவிட்டது உண்மைதான். அதன் வேக வளர்ச்சியிலே ராக்ஷல உருவம்கூட அடைந்துவிட்டது. உண்மையின் சிறுதளத்தின்மீது எழுந்த செய்தி பொய் உரு ஏற்று பூதாகார வதந்தியாக வளர்ந்து ஊரெங்கும் வியாபித்தது. சிரித்தார்கள் பலரும். அவர்கள் சிரித்தவைகள் பற்பல. அவை கருவுயிர்த்த அர்த்தங்கள் தனித்தனிதான். 3의 தாமோதரன் வெளியே தலைகாட்டும்போதெல்லாம் விஷப் பார்வையும் விஷமச் சிரிப்பும் ஏந்தி எதிர்வந்த மனிதர்களையே கண்டான். அவன் பின்னால் எக்காளமிட்டுச் சிரிக்கும் வீணர்கள் மலிந்துவிட்டதை உணர்ந்தான். 'போறாரு பாருடா ஞானகுரு லட்சியவாதியாமில்லே! இந்த லட்சியத்திற்காகத்தான் அவர் வாடியிருந்த கொக்காகக் காத்துக் கிடந்தார் போலிருக்கு என்று கெண்டை பண்ணும் கயவர்கள் பெருத்து வருவதை அறிந்தான். துணிந்த பேர்வழிகள் சிலர் அவனை அணுகி சந்தேக விளக்கம் கேட்பதுபோல் பல பிரச்னைகளையும் பிரஸ்தாபித்து, பேச்சோடு பேச்சாகக் கல்யாணம், தாலி கட்டுவது, ரிஜிஸ்டர் விவாகம் பற்றியெல்லாம் கேட்டு வைப்பார்கள். அவன் தனது கருத்துக்களை அறிவிக்கும்போதே ஆமாமா. பார்க்கப்போனால் தருமச்சடங்குகள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/144&oldid=841355" இலிருந்து மீள்விக்கப்பட்டது