பக்கம்:செவ்வானம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 151 இந்த அக்கிரமம் செய்தவர் நிலைத்து நின்று அவ்வளவையும் எரித்து விட்டுப்போக விரும்பவில்லை போலிருக்கிறது. தீ வைத்து விட்டால் தானாகப் பற்றி எரித்துவிடும் என்று எண்ணினார்களோ என்னவோ. ஒருவேளை யாராவது வரும் காலடி ஓசை கேட்டிருக்கலாம். ஆனால் யார் இரவு நேரத்திலே இங்கு வரப் போகிறார்கள் என்று நினைத்தான் அவன். 'நான் இங்கு இல்லாமல் போனதும் நல்லதுதான். சந்தர்ப்ப சகாயம் என்றே தோன்றுகிறது. திருடுவதற்கு இங்கு எதுவும் கிடையாது. தேடிப்பார்த்துவிட்டு, ஆத்திரத்தைத் தணித்துக் கொள்ள இப்படிப் புத்தகங்களை நாசப்படுத்தியிருப்பார்கள். அவர்கள் திருடுவதற்காக மட்டுமே வந்திருக்க மாட்டார்கள். என்னை உதைத்துக் காயப்படுத்தும் நோக்கமும் அவர்களுக்கு இருந்திருக்கும் என்று எண்ணினான். இவ்விதம் யார் செய்திருப்பார்கள் என்ற கேள்வி பிறந்தது அவன் மனதில் தெரியாதா முதலாளி புன்னைவனத்தின் கூலியாட்கள்தான் செய்திருக்க வேண்டும். சிவசைலம் துண்டி விட்டிருப்பார் என்று மனமே பதிலும் சொன்னது. நாசமாக்கப்பட்ட புத்தகங்களையே கவனித்துக் கொண்டிருந்த தாமோதரன் இதயத்தில் வேதனை சுமந்தது. எவ்வளவு காலமாகச் சேர்த்த அரிய நூல்கள் எவ்வளவு பொருட் செலவில் சேர்த்த பொக்கிஷங்கள் தளதளவென்று வளர்ந்து பசுமையாய்த் திகழும் விளை நிலத்திலே பன்றிகள் புகுந்து குதறியும், கடித்தும், பள்ளம் பறித்தும் அட்டூழியங்கள் செய்து குப்பைக் காடாக மாற்றி விடுவதைப்போல், ஒருசில மணிகளிலே பாழ்படுத்திப் போய் விட்டார்கள் கயவர்கள். அவர்கள் கோபமெல்லாம் களங்கமற்ற காகிதங்கள் மீதுதானா பாயவேண்டும்! அவன் உள்ளத் துயரம் அதிகரித்தது. வாழ்க்கைத் தேவை களைப் போதுமானபடி பெறமுடியாமல் செத்த வாழ்வு வாழ்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/153&oldid=841365" இலிருந்து மீள்விக்கப்பட்டது