பக்கம்:செவ்வானம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 155 திடீரென்று குமுதம் என்று அழைத்தான் அவன் ஊங்? என்று அவள் அவன் முகத்தைப் பார்த்தாள். 'குமுதம், என்னை மன்னித்துவிடு, களங்கமற்ற உனது பெயர் என்னால் கெட்டுவிட்டது. நாம் குற்றமற்றவர்கள் என்று எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் யாரும் நம்பப்போவதில்லை என்றான். குமுதம் ஒன்றும் சொல்லவில்லை. அவள் உள்ளத்தில் உணர்ச்சிகள் போராடிக்கொண்டிருந்தன. இப்பொழுது நாம் இரண்டு பேரும் சேர்ந்து போவது போலவே, வாழ்க்கைப் பாதையிலும் துணைவர்களாகக் கைகோத்துச் செல்வோமே! என்று அவன் சொல்ல மாட்டானா என்ற ஆசைதலைதூக்கியது அவள் உள்ளத்தில். அவள் ஆசைப்பட்டது போல நடந்துவிட்டால் எதிர்காலம் இன்பம் நிறைந்ததாகத்தானிருக்கும் என்று நினைத்தாள் குமுதம், ஆனால் இந்தப் பிரச்னை பற்றிப் பேசாமல், வழக்கம்போல் அனுதாபம் அறிவித்துவிட்டு அவன் வேறுதிசை நோக்கி ரயிலேறி விட்டால்? இதை எண்ணவும் குமுதத்தின் உள்ளம் துடித்தது. பெயர் கெட்டதுடன் வாழ்க்கையும் பாழாகிவிடும் என்று கருதினாள் அவள். ‘என்னைப்பற்றி, நான் தனியாகச் சென்றால் இனியும் எனக்கு ஏற்படக் கூடிய தொல்லைகளைப் பற்றி இவர் எண்ணாமலா இருப்பார்? அல்லது அவர் கவலையே அவருக்குப் பெரிதாகி விட்டதோ என்னவோ!' என்றும் நினைத்தாள் அவள். தாமோதரன் முதலாளியின் செயல்களை பணம் படைத்த வர்களின் அக்கிரமங்களை, பண பலத்தினால் அவர்கள் எதையும் சாதிக்க முடிவதுடன் தங்களைப் பாதிக்கும் விஷயங்களுக்குத் திரைபோட்டு மூடிவிடஇயல்வதைப் பற்றி எண்ணினாள். என்னதான் யோக்கியமாக வாழ்ந்தாலும், உண்மை நியாயம் நேர்மை லட்சியம் முதலியவைகளுக்காக வாழ்க்கையையே வேதனை நிறைந்த போராட்டமாக மாற்றிக்கொண்டாலும்கூட, சந்தர்ப்பங்களும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/157&oldid=841369" இலிருந்து மீள்விக்கப்பட்டது