பக்கம்:செவ்வானம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணின் 67 சுகமும் பாக்கியங்களும் வந்துசேரும், நான் பிறரது இன்பத்துக் குத் துணை புரியும் கருவியாக என்னை மாற்றிக் கொண்டால் நான் போற்றிவந்த புனிதத் தன்மையை இல்லாதாக்கிவிட்டால்: தினசரி வாழ்க்கையே வேதனையாக மாறிவிடும்போது, வாழ்விலே இன்பம் காண்பது எப்படி? அன்றாட வாழ்க்கைத் தேவைகளைத் தேடிக் கொள்ள முடியாது திணறுகிற பொழுது சுகமாக வாழ வசதிகளைப் பெறுவதெங்கே? எனக்கு உயிராசை இருக்கிறது. சுகமாக வாழவேண்டும் என்ற எண்ணம் வளர்ந்து வருகிறது. ஆனால் சந்தர்ப்பங்கள் வகை செய்யவில்லை. சூழ்நிலை உதவவில்லை. ஆகவே என்னை நானே அழித்துக் கொள்ள விரும்புகிறேன்.' இத்துடன் முடிந்துவிட்டது குமுதத்தின் குறிப்புகள் படித்து முடித்த தாமோதரன் பெரு மூச்செறிந்தான். அவள் ஒரு பிரச்னை, சமுதாயத்திற்கே சவாலாக உள்ள ஒரு பெரிய பிரச்னை, அவள் வாழத்தான் வேண்டும். அவளைச் சாகவிடாமல் காப்பாற்றியது நல்லதாயிற்று' என்று பேசியது உள்ளம். - அவளாகவே முயன்றும் வாழ முடியவில்லை என நம்பிக்கை இழந்துவிட்டபோது நீ மட்டும் அவளுக்கு எவ்விதம் உதவி செய்து விட இயலும்? உன்னால் அவள் மீது வீண் களங்கம் ஏற்படாமல் வேறு கவனிக்க வேண்டுமே! இந்த நினைப்பும் உடனெழுந்தது. இரவிலே சாகத் துணிந்த அவளுடன் பேசி நின்றதை மறைவாகப் பதுங்கியிருந்து கவனித்த கயவர்கள் அவ்வேளையிலேயே இழிவாகப் பேசியது அவன் எண்ணப்பரப்பிலே குமிழாய் வெடித்தது. அவர்கள் யாரோ? தன்னைப் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் வந்து, பரிகசிப்பிற்கு உள்ளாக்கத்தகுந்ததுருப்புச்சீட்டு கிடைத்து விட்டதாக மனமகிழ்ந்து திரும்பியிருக்கலாம். அவர்கள் என்ன செய்வார்களோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/69&oldid=841435" இலிருந்து மீள்விக்கப்பட்டது