பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


ராய்த் தாவரங்கள் தரும் காய்கனிகளையும் தினை முதலிய விளைபொருளையும் இறைவனுக்குத் திருவமுதாகப் படைத்து நெல்லும் மலருந்துவி வழிபடும் இவ்வழிபாடு, ஆருயிர் முதல்வனாகிய இறைவனது இனிய அருளின் நீர்மையுணர்ந்து அம்முதல்வன்பால் இடையறாப் பேரன்பின் பயனாக நிகழ்வதாகும். இவ்வழிபாட்டில் ஈடுபட்டோர் யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடை இறைவனது பெருமையினையும் பாசப்பிணிப்பில் அகப்பட்ட தமது சிறுமையினையும் எண்ணியெண்ணி நெஞ்சம் நெக்குருகிக் கைகளைத் தலைமேற் குவித்துக் கண்ணீர் சொரியும் இயல்பினராவர்.

தொல்பழங்காலத்தில் அறியாமையிருளிற் சிக்குண்ட மக்கள் அச்சத்தால் மேற்கொண்ட பல்வேறு சிறுதெய்வ வழிபாடுகளும் அறிவு வளர்ச்சி பெற்று நனிநாகரிக முடையராய் வாழ்ந்தகாலத்து அன்பினால் மேற்கொண்ட பெருந்தெய்வ வழிபாடுகளும் சங்க இலக்கியங்களில் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. உலகெங்கும் அச்சத்தால் அரும்பி அன்பினால் மலர்ந்து அறிவினால் விரிந்து பரவிய தெய்வ வழிபாடுகளிற் பெரும்பாலான மக்கள் முதிர்ந்த நாகரிகமுடையராய்த் திகழும் இக்காலத்திலும் பலதிற மக்களால் மேற்கொள்ளப்பெறும் பரப்புடையனவாகக் காணப்படுகின்றன. அச்சத்தினைக் காரணமாகவுடைய சிறு தெய்வ வழிபாடுகளும் அன்பினைக் காரணமாகவுடைய பெருந்தெய்வ வழிபாடுகளும் ஊர்தோறும் ஒருங்கு நிகழக் காண்கின்றோம். இவ்வாறே கடைச் சங்க காலத்திலும் ஊனுங் கள்ளும் படைத்து வணங்கும் சிறு தெய்வ வழிபாடு களும் நெல்லும் மலருந்து வி வணங்கும் பெருந்தெய்வ வழிபாடுகளும் ஆகிய இருவகை வழிபாடுகளும் தமிழக மக்களால் மேற்கொள்ளப் பெற்றுள்ளன. எனவே இவ்வழிபாடுகள் அனைத்தும் அவ்வக்காலத்தில் அவ்வவ் ஆர்களில் வாழ்ந்த மக்கள் பெற்றுள்ள அறிவு நிலைகட்கும் வாழ்க்கை யனுபவங்கட்கும் ஏற்ப ஆங்காங்கே நிகழ்ந்தன எனக் கொள்வதல்லது, இவ்வழிபாடுகளுள் இன்னின்னவை இன்னின்ன காலத்தில் இன்னின்ன இடத்தில் வாழ்ந்த மக்களால் மேற்கொள்ளப் பெற்றன எனக் காலம் பற்றியும்