பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


இடம் பற்றியும் இவ் வழிபாடுகளே வரையறுத்து வகைப்படுத்துரைத்தற்கு இயலவில்லை.மக்கள் வாழும் நிலத்தியல்புக்கு ஏற்ப அவர்தம் மனத்தியல்பாகிய தெய்வங்கொள்கையும் வழிபாட்டு முறைகளும் தோன்றி நிலை பெறுவன என்பதும் தெய்வங் கொள்கையினை அவ்வந்நிலத்துக் கருப்பொருள்களும் முதற்கண் வைத்தெண்ணுதல் தமிழ்ப் பொருளிலக்கண மரபென்பதும் முன்னர் விளக்கப்பெற்றன. முல்லை நிலத் தெய்வம் மாயோன். மாயோன்மேயகாடுறையுலகம் என்றார் தொல்காப்பியர். முல்லை நிலத்துக் கோவலர், தம்மால் மேய்க்கப் பெறும் ஆனிரைகள் பாற் பயன் தருதல் வேண்டி அந்நிலத்துக் காயாம்பூவண்ணனாகிய திருமாலைப் பரவிக் குரவைக் கூத்தாடுதலும் தம் மகளிரைத் தக்கவனுக்கு மனஞ் செய்து கொடுத்தல் வேண்டிக் கொல்லுந் தன்மையனவாகிய எருதுகளை வளர்த்து அக்காளையினை வளைத்துப்பிடித்த தறுகணாளனுக்கே தம் மகளை மணஞ்செய்து தருதலும் ஆகிய ஒழுகலாறுகளையுடையராய் வாழ்ந்தனர் என்பது முல்லைக் கலிப்பாடல்களால் இனிது விளங்கும்.மைவரையுலகமாகிய குறிஞ்சி நிலத்திற்குச் சேயோனாகிய முருகனே தெய்வம் என்பது முன்னர்க் கூறப்பட்டது. குறிஞ்சி நிலத்துக் குறவர்கள் தெய்வ மணமாகிய வெறியினையறியுஞ் சிறப்பினையுடைய வேலன் என்னும் முருக பூசாரியை யழைத்து வெறியாடச் செய்து முருகனை வழிபட்டுப் பசியும் பிணியும் பகையும் நீங்க மழைவளஞ் சுரந்தருள்க என வாழ்த்தி வரம்பல பெற்று மகிழ்ந்தனர் என்பது சங்க இலக்கியங்களிலுள்ள குறிஞ்சித் தினைப் பாடல்களாலும் பத்துப்பாட்டின் முதற்கண் அமைந்த திருமுருகாற்றுப்படையினாலும் பரிபாடலிற் செவ்வேளைப் போற்றிய பாடல்களாலும் நன்கு புலனாகும்.வயலும் வயல் சார்ந்த இடமும் ஆகிய மருத நிலத்திற்குத் தெய்வம் மழைவளந்தரும் இந்திரனாகிய வேந்தன். மருதநிலத்து உழவர்கள் மலர்தலையுலகிற்கு உயிரெனச் சிறந்த மன்னனை வாழ்த்தி வானோர்