பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

95


தலைவனாகிய இந்திரனைப் பன்னிறமலர்களைத் தூவி வழிபட்டு இந்திர விழா நிகழ்த்தினர். இச்செய்தி ‘இந்திரவிழவிற்பூவின் அன்ன (ஐங்குறு. 62) எனவரும் ஐங்குறுநூற்றுத் தொடராலும் சிலப்பதிகாரம் இந்திர விழவூரெடுத்த காதை, மணிமேகலை விழாவறை காதை முதலிய பிற இலக்கியங்களாலும் நன்கு தெளியப்படும்.

பெருமனலுலகமெனப்படும் நெய்தல் நிலத் தெய்வம் வருணன். அந்நிலத்துப் பரதவர்கள் கடலில் மீன் பிடித்தலைத் தொழிலாகக் கொண்டவர்கள். தமக்கு வலைவளஞ்சுரத்தல் வேண்டித்தமது மனையின் கண் சுறாமீனின் கொம்பினை நட்டுக் கடற்றெயவமாகிய வருனைைன வழிபட்டனர். இச்செய்தி,

“சினைச்சுறவின் கோடுநட்டு

மனைச் சேர்த்திய வல்லணங்கின்’

எனவரும் பட்னப்பாலையடிகளாலும் நெய்தற்றினைபற்றிய சங்கப் பாடல்களாலும் நன்கு புலனாம்.

நானிலத் தெய்வங்களாக இங்குக் குறிக்கப்பெற்ற தெய்வ வழிபாடுகளேயன்றிப் போரின் சிறந்த வெற்றியினை விளைக்கும் தாய்க் கடவுளாகிய கொற்றவை வழிபாடும் தறுகண் மறவர்களால் மேற்கொள்ளப்பெற்றது. சிறந்த கொற்றவை எனத் தொல்காப்பியனாராற் குறிப்பிடப்பெற்ற இத்தாய்த்தெய்வம் (1114) "கானமர் செல்வி (1268). விறல்கெழுசூலி எனவும் (1636) அருந்திறன் மரபிற் கடவுள்' (பதிற்று.) எனவும் சங்கவிலக்கியங்களிற் போற்றப் பெறுகின்றது. அயிரைமலையிற் கோயில் கொண்ட இத் தெய்வத்தினை உருகெழு மரபின் அயிரை எனவும், இத் தெய்வம் எழுந்தருளிய காட்டினைக் கடவுட் பெயரிய கானம்’ எனவும் பெருங்குன்றுார்கிழார் குறித்துள்ளார். ஆசிரியர் தொல்காப்பியனார் கொற்றவை என்னும் தெய்வத்திற்கு நிலம் வகுத்திலர். காடும் மலையும் கூடிய நிலப்பகுதியிலே கொற்றவைவழிபாடு நிகழ்ந்தமை கடைச் சங்கச் செய்யுட்களில் குறிக்கப்பெற்றுளது. எனவே முல்லையும் குறிஞ்சியும் வேனில் வெப்பத்தால் வளம் குன்றிய