பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

109


படைத் தொடரைக் கூர்ந்து நோக்குங்கால் காளிகோயிலில் அவ்விறைவிக்குப் பணிபுரியும் பேய்மகளிர் இருப்பர் என்னும் நம்பிக்கை சங்ககால மக்களுள்ளத்தே நிலை பெற்றிருந்தமை நன்கு புலனாகும். பிற்காலப் பரணி இலக்கியங்களில் வரும் பேய் பாடியது, கோயில் பாடியது, காளிக்குக் கூளி கூறியது முதலிய செய்திகள் பண்டைக் காலத்து நிலவிய நம்பிக்கையின் தொடர்பாக வளர்ந்து வந்த இலக்கிய மரபுகளாயின. பூதங்கள் வாசலிலே காத்து நிற்றலால் புகுதற்கரிய அச்சத்தை விளைப்பது காளிகோயில் என்பதனைப் 'பூதங்காக்கும் புகலருங்கடி நகர் (பட்டினப். 57) என்ற பட்டினப்பாலைத் தொடர் புலப்படுத்துகின்றது. போர்க்களத்து இறந்துபட்ட வீரர்களின் உடல்களாகிய பினத்தினைத் தின்று வாழும் இயல்புடைய மகளிர் முற்காலத்து இருந்தனர் என்ற நம்பிக்கை சங்கத்தொகை நூல்களாற் புலனாகின்றது. அவர்கள் அழகில்லாத உருவத்தினராகவும் கண்டோரஞ்சத்தக்க தோற்றத்தினராக வும் இருந்தமையால் ‘பேய் எனப்பட்டனர். தறுகண் மறவர் போர்க்களத்திற் பகைவரோடு பொருது உயிர்துறந்த நிலையிற் பினந்தின்னுமியல்பினராகிய பேய் மகளிர் தமக்கு ஊனுணவு கிடைத்ததென்னும் பெருங்களிப்புடையராய்க் கால் பெயர்த்து ஆடுவதனை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இங்ங்னம் பிணந்தின்னும் பென்னினத்தைப் பேய் எனவும் அவ்வினத்தின் ஆனினைக் கூளி எனவும் வழங்குதல் மரபு. பேயும் கூளியும் முறையே பெண்ணும் ஆனும் ஆகிப் பிணந்தின்று வாழ்வன என்பது,

“கணங்கொள் கூளியொடு கதுப்பிகுத் தசைஇப் பிணந்தின் யாக்கைப்பேய்மகள் துவன்றவும்”

(பட்டினப். 24,25)

எனவரும் பட்டினப்பாலைத் தொடராற் புலனாம். “திரட்சி கொண்ட ஆண்பேய்களுடனே மயிரைத் தாழ்த்து இளைத்துப் பிணத்தைத் தின்னும் வடிவையுடைய பேய்மகள் நெருங்கும்படி” என இத்தொடர்க்கு நச்சினார்க்கினியர் வரைந்துள்ள உரை பேய்களுள் ஆண் பேய்க்குக் கூளி என்பது பெயராதலை நன்கு புலப்படுத்தல் காணலாம்.