பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


"பிணங்கோட்ட களிறு குழும்பின்

நிணம் வாய்ப் பெய்த பேய் மகளிர்” (மதுரைக். 24,25)

எனவரும் மதுரைக் காஞ்சித் தொடர் பிணந்தின் மகளிரைப் பேய் எனக் குறித்தல் இங்குக் கூர்ந்து நோக்குதற்குரியதாகும்.

எண்ணெய் தடவப் பெறாது வறண்ட மயிரினையும் வரிசையொவ்வாது பிறழ்ச்சியுற்ற பற்களையும் பெரிய வயிற்றினையும் சினத்தாற் சுழலும் விழியினையுடைய பசிய கண்களையும் கொடுமை செய்யும் பார்வையினையும் பிதுங்கிய கண்ணையுடைய கோட்டான் என்னும் பறவையுடன் கடிய பாம்பு தன்னிடத்தே தொங்குதலால் பெரிய கொங்கையினை வருத்துகின்ற காதினையும் சொர சொரப்புடைய பெரியவுடம்பினையும் காண்போர்க்கு நடுக்கந் தரும் நடையினையும் அச்சந்தரும் தோற்றத்தினை யும் உடைய உருவத்தினளாகிய பேய்மகள் உதிரத்தை யளைந்த கூரிய நகங்களையுடைய கொடிய விரலாலே கண்களைத் தோண்டி உண்ணப்பட்ட மிக்க முடைநாற்ற முடைய தலையை ஒள்ளிய தொடியணிந்த பெரியகையிலே ஏந்தியவளாய்த் தோளையசைத்துத் துனங்கைக் கூத்தாட முருகப்பெருமான் அவுனரை வென்றடக்கிய செய்தி திருமுருக ற்றுப்படையிற் கூறப்பட்டது. செவ்வேள் சூர்மாவைத் தடிந்த போர்க்களத்தில் துணங்கைக் கூத்தாடிய பேய்மகள் மக்கள் யாக்கையினும் மிகப் பெரிய வடிவினளாகக் கூறப்படுகின்றாள்.

மேல்நோக்கிச் சுடர்விட்டெரியும் இயல்புடைய நெருப்புச் சாய்ந்தெரிந்தாலொத்த நாவினையும் வெள் யாட்டுக் குட்டிகளையணிந்த காதினையும் பிளவுபட்ட பாதங்களையும் உடைய பேய்மகள் நினத்தைத் தின்று சிரிக்கும் தோற்றம் சிறுபாணாற்றுப்படையில் உவமையாகக் குறிக்கப்பெற்றுள்ளது. வேந்தர்கள் பகைவர்களை வென்று போர்க்களத்தின் கண்னே வெற்றித் தெய்வமாகிய கொற்றவையை வணங்கிப் பேய் முதலியவற்றுக்குப் பலியிடுதல் வேண்டி மறக்களவேள்வி செய்வர். பேய்களில் சமைத்தற்றொழிலில் வல்லனாய்ப் பரிமாறும் முறைதெரிந்த