பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

111


ஆண்பேயாகிய சமையற்காரன் போரிற் புறங்கொடாது இறந்த மறவர்களின் வீரவளையினையுடையவாகிய தோளையுடைய கைகளையே துடுப்பாகக் கொண்டு துழாவிச் சமைத்த ஊன் சோற்றைப் பகைவராற் கோபித்தற்கரிய கடிய வாயினையும் சீரிய தொழிலினையு முடையராய் முன்வைத்த அடி பின்னிடாதபடி போர்செய்த படைவீரர்க்கு விருந்தாகப்படைக்கும் முறையில் மறக்கள வேள்வி நடந்தது. இச்செய்தி,

“தெறலருங் கடுந்துப்பின்

விறல்விளங்கிய விழச்சூர்ப்பின் தொடித்தோட்கை துடுப்பாக வாடுற்ற ஆன்சோறு நெறியறிந்த கடிவாலுவன் அடியொதுங்கிப்பிற்பெயராப் படையோர்க்கு முருகயர” (மதுரைக்காஞ்சி 32 - 38)

எனவரும் மதுரைக்காஞ்சித் தொடர்களாற் புலனாம்.

சங்கவிலக்கியப் புறத்தினைப் பாடல்களுட் பேய் மகளிர் செயல்கள் புனைந்துரைக்கப் பெற்றுள்ளன. இவர்கள் மக்களினத்திற்றோன்றிப் பினந்தின்னும் பழக்க முடையராய் மக்களினத்தின் வேறுபட்டு அழகிலா வுருவினராய்க் கண்டோர் வெருவி ஓடும்படி அச்சந் தரும் வடிவினராதலின் பேய் என்னும் பெயர் பெற்றனர் என எண்னத் தோன்றுகின்றது. அச்சம் என்னும் பொருளுடைய பேம் என்னும் உரிச்சொல்லின் அடியாகப் பிறந்தது பேய் என்னும் பெயராகும்.

மக்கள் வடிவிற்கானப்படும் இவர்களேயன்றி இவர்கட்கு வேறாக் மக்களை அச்சுறுத்தும் அணங்காகிய பேய்கள் உள்ளன என்பதும் அவற்றுக்குப் பலி கொடுத்துப் பரவு செய்தால் அவை அப்பலியினைப் பெற்றுத் தம்மைக் குறித்துப் பலியிட்டவர்களுக்கு எத்தகைய தீங்குஞ் செய்யாது திரும்பி விடும் என்பதும் பண்டைக் காலத்து மக்கள் கொண்ட நம்பிக்கையாகும். இக்குறிப்பு,