பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


|

3.

2

“மெய்பணிகூரத அணங்கெனப் பராவலிற் பலிகொண்டு பெயரும் பாசம் போலத்

திறைகொண்டு பெயர்தி” (பதிற். 71)

எனத் தகடுரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறையை நோக்கி அரிசில் கிழார் பாடிய பாடலில் வரும் உவமையில் எடுத்தாளப் பெற்றுள்ளமை காணலாம். “மெய்ந்நடுக்கம் மிக்கு அனங்கெனக் கருதிப் பரவுதலால், பேயானது தன்னைப் பற்றினாருயிரை வெளவாது அவர் அஞ்சித் தரும் பலிப்பொருளேற்றுக்கொண்டு அவர்க்குத் தீங்கு செய்யாமல் திரும்புமாறுபோல வேந்தனாகிய நீயும் நின்னையஞ்சித் தொழும் பகைவரது உயிரை வெளவாது அவர்தந்த திறைப் பொருளையேற்றுக்கொண்டு திரும்புகின்றாய்” என்பது மேற்குறித்த தொடரின் பொருளாகும். இத்தொடரில் வந்துள்ள பாசம் என்னும் சொல்லுக்குப் பேய் என்பது பொருள். அஞ்சினாருயிரைப் பிணித்து வருத்துதலின் பாசம் என்பது பேய்க்குப் பெயராயிற்று.

“ஏனைப்பசாசு அருள். என்னை நலிதரின்

இவ்வூர்ப்பலிநீ பெறாஅமற் கொள்வேன்” (கலித். 65 :17-18)

எனக் கலித்தொகையிற் பார்ப்பானொருவன் கூறியதாகக் தோழி படைத்து மொழியும் தொடர், அச்சுறுத்தும் பேய்கள் ஊர் மக்கள் தரும் பலிப் பொருளை இரவில் எதிர்பார்த்து வாழும் இயல்புடையன என்பதனையும் அத்தகைய பேய்களுக்குப் பலியிடுதலை ஊர் மக்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்பதனையும் நன்கு புலப்படுத்தல் கானலாம்.

பகைவரது படையெடுப்பினாற் சிதைந்து பாழ் பட்டமையால் மக்கள் செல்லாத பாழிடங்களிலும் இருள் செறிந்த இரவுப் பொழுதிலும் இறந்தோர் உடம்பினை யடக்கஞ் செய்யும் ஈமப்புறங்களிலும் காளி கோட்டங்களிலும் மக்களை வருத்தும் பேய்கள் அலைந்து திரிவன என்பது பண்டைக்கால மக்களிடையே நிலவிய நம்பிக்கையாகும்.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்