பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


காணப்படும் நம்பிக்கையுணர்வாகும். எனவே தெய்வத்தின் முன்னிலையிற் சூளுறவு செய்யப்புகுவோர் அதிலிருந்து தவறினால் தமக்கு வரும் துன்பத்தினையும் எண்ணியே சூள் செய்தல் வேண்டும். தெய்வத்தின் முன்னர்ச் செய்த சூளுறவிற் பிழைத்தோர் துன்புறுவர் என்பதனை வற்புறுத்தும் கருத்திலேயே இன்னாத்தொல்சூள்' எனவும் அணங்குடை யருஞ்சூள்' (நற். 386) எனவும் அடைகொடுத்தோதுவர் பண்டைத் தமிழ்ச் சான்றோர்.

ஒத்த அன்புடைய ஒருவன் ஒருத்தியாகிய காதலர்களது காதலுணர்வினையும் பகைவரால் நாட்டிற்கு நேரும் தீமைகளைப் போக்கும் குறிக்கோளுடையராய்த் தம்முயிரைப் பொருட்படுத்தாது பகைவரோடு பொருது வெல்லும் போர் மறவர்களது வெற்றித் திறத்தையும் விரித்துரைக்கும் முறையிற் பாடப் பெற்ற சங்கச் செய்யுட்கள் காதலும் வீரமும் ஆகிய இவ்விருவகையுணர்வுகளுக்கு அரண் செய்யும் தெய்வ வழிபாட்டினையும் சிறப்பாக வலியுறுத்தியுள்ளமை இங்கு நோக்கத்தகுவதாகும்.

பல பிறப்புக்களிலும் கணவனும் மனைவியுமாக அன்பினாற் கூடி வாழ்ந்த ஒருவனும் ஒருத்தியுமாகிய இருவர், அடுத்துவரும் பிறவியிலும் நம்பியும் நங்கையுமாய் வளர்ந்த இளம்பருவத்தே நல்லுழின் செயலால் ஒருவரையொருவர் எதிர்ப்பட்டு உலகத்தார் அறியாதவாறு மறைவிற் கூடி மகிழும் கேண்மை தமிழ் மக்களது அகத்தினை யொழுகலாற்றில் இயற்கைப் புணர்ச்சியெனப்படும். இவ்வாறு நல்லூழின் திறத்தால் தலைமகளை எதிர்ப்பட்டு அன்பினால் அளவளாவிய நிலையில் தலைமகன் தன்னைப் பிரிந்து சென்று விடுவானோ என்ற அச்சம் தலைமகள் உள்ளத்தே தோன்றுதல் இயல்பு. இங்ங்னம் ஐயுற்றுவருந்திய தலைமகளது அச்சவுணர்வினைப் போக்கி அவளைத் தெளிவித்தல் வேண்டித் தலைமகளை நோக்கி, “நின்னை ஒருபொழுதும் பிரியமாட்டேன்’ எனத் தலைவன் தெய்வத்தின் திருமுன் சூளுறவு (சபதம்) செய்து கொடுத்தல் முறையாகும். இவ்வாறு தெய்வத்தின் திருமுன் சூளுறவு செய்து தலைமகளைத் தேற்றும் முறை முன்தேற்று'