பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

115


எனப்படும் என்பது முன்னர் விளக்கப்பெற்றது. தலைமகளைத் தேற்றுதல் வேண்டித் தலைவன் தெய்வத்தின் முன்னிலையிற் செய்யும் இச் சூளுறவு தலைவியையின்றித் தன் வாழ்வு நடவாது என்னும் உண்மையினைத் தலைமகள் மனங்கொள்ளும் தலைமகனைத் தெரிவிப்பதாகலின் 'முன்தேற்று என வழங்கப் பெறுவதாயிற்று.

இயற்கைப் புணர்ச்சியில் தலைமகளைக் கூடிய தலைவன், தலைமகளது உள்ளக்கருத்து தன்னை மணந்து கொண்டு இல்லறம் நிகழ்த்துதலாக இருக்கும் என நினைந்து “பலரும் வந்து உண்ணும்படி கதவு திறந்துகிடக்கும் வாசலையுடையதும், மிடாவிற் சமைத்த சோற்றை வருவார்க்கெல்லாம் வரையாமல் இடுதலால் விழாக் கொண்டாடினாற் போன்ற செல்வத்தையுடையதும் ஆகிய வளமனை பொலிவு பெறும்படி பசுத்த நினம் ஒழுகிய நெய்மிக்க அடிசிலைச் சுற்றத்தார்க்கும் விருந்தினர்க்கும் நீ இடுகையினாலே அவர்கள் உண்டு மிகுந்த எஞ்சிய உணவினை நீ எனக்கு இடுதலினாலேயான் நின்னுடன் இருந்து உண்ணுதலும் எனக்கு உயர்வு விளைப்பதாகும்” என்று சொல்லி இவ்வாறு திருமணஞ் செய்து கொண்டு வாழும் மனையறமே தங்களைப் பிறவிக்கடலினின்றும் இன்பக்கரையேற்றுவதாகத் தெளிவித்து, பெரியமலையில் மிகவுயர்ந்த இடத்தேயுறைகின்ற முருகப் பெருமானையும் வாழ்த்தி வணங்கி அவ்விறைவன் முன்னே தலைமகள் பாதுகாவலுறைதற்குக் காரணமாகிய வஞ்சினத்தை உண்மையாகவே தெளிவித்து அதற்கு அடையாளமாக அம்மலையில் ஒழுகும் அழகிய இனிய தெள்ளிய நீரைக் குடித்துச் சூளுறவு செய்தனன் என்ற இச் செய்தியைக் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டு விரித்துரைக்கின்றது. "குன்றுகெழுநாடன் எம் விழைதகு பெருவிறல்

உள்ளத்தன்மை உள்ளினன் கொண்டு சாறயர்ந்தன்ன மிடாச் சொன்றி வருநர்க்கு வரையாவளநகர் பொற்ப மலரத்திறந்த வாயில் பலருணப் பைந்நின மொழுகிய நெய்ம்மலியடிசில்

வசையில் வான்திணைப்புரையோர் கடும்பொரு