பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

131


பலியுணவாகிய சோற்றினை விழுங்கிய கருங்காக்கை மனையைச் சேர்ந்து வளர்ந்துள்ள நொச்சியின் நிழலிடத்தே கிடந்த யாமைப்பார்ப்பினைத் தான் தின்னுதலை வெறுத்து அதனைப் பின் காலத்துத் தின்னுதற்காகப் பாதுகாத்து வைத்தது என்ற செய்தியினை,

'செஞ்சோற்ற பலிமாந்திய

கருங்காக்கை கவவு முனையின் மனைநொச்சி நிழலாங்கண்

ஈற்றியாமைதன்பார்ப்போம்பவும்” (பொருந. 184-6)

எனவரும் பகுதியில் முடத்தாமக்கண்ணியார் என்னும் புலவர் தாம் பாடிய பொருநராற்றுப்படையிற் குறித்துள்ளார்.

முரசுடைய முடிவேந்தரும் வேளிராகிய குறுநில மன்னரும் ஒருவர் துணிந்ததே காரியமாக அனைவரும் துணிந்து கடலிலுள்ளனவும் காட்டிலுள்ளனவுமாகிய தம்முடைய அரண்களாற் பாதுகாப்புப் பெறாது நடுங்கும் வண்ணம் மிக்க வலிமிக்கக் கடிய போர் ஆரவாரம் விசும்பு அதிரும்படி சினத்தையெழுப்பி முழுங்கும் மந்திரத்தாலே பொறுத்தற்கரிய பேராற்றலையுடைய அயிரையென்னும் கொற்றவையாகிய கடவுளைப் பேணி வழிபடுதற் பொருட்டு உயர்ச்சியுடையோனாகிய பூசகன்கரிய கண்களையுடைய பேய்மகளும் கைபுடைத்து நடுங்கும்படி தன்கையில் ஏந்திய பெறுதற்கரிய சோற்றுத் திரளையும் எறும்பு மொய்க்காத வியக்கத்தக்க இயல்புடைய குருதியொடு கலந்த நிறைந்த கள்ளொடு பொருந்திய பலியுணவையும் காக்கையும் பருந்தும் இருந்து உண்ணும்படி போர்க்களத்திற் பெருஞ்சோறு உகுத்தற்குப் பல்யானைச் செல்கெழு குட்டுவனது வீரமுரசு போரை விரும்பிய வீரர்களின் இடியோசை போன்ற குரலுடன் பொருந்தி முழங்கப்பெற்றது. இச்செய்தி,

“பணைகெழு வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து

கடலவுங் காட்டவும் அரண்வலியார் நடுங்க