பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


கடுஞ்சினங் கடாஅய் முழங்கு மந்திரத்து அருந்திறல் மரபிற் கடவுட் பேணியர் உயர்ந்தோன் ஏந்திய அரும்பெறற் பிண்டம் கருங்கட் பேய்மகள் கைபுடையூட நடுங்க நெய்த்தோர் தூஉய நிறைமகிழ் இரும்பலி எறும்பு மூசா இறும்பூது மரபிற் கடுங்கட் காக்கையொடு பருந்திருந்து ஆர ஓடாப்பூட்கை யொண்பொறிக் கழற்கால் பெருஞ்சமந்ததைந்த செருப்புகல் மறவர் உருமு நிலனதிர்க்குங் குரலொடுகொளைபுணர்ந்து பெருஞ்சோறு உகுத்தற்கு எறியும் கடுஞ்சின வேந்தேநின் தழங்குகுரல் முரசே (பதிற். 30)

எனப் பாலைக் கெளதமனார் பாடிய பாடலிற் குறிக்கப் பெற்றது. வெற்றிவெல்போர்க் கொற்றவையாகிய அருந்திறற் கடவுள் தனது ஆணையால் தன் பலிகளைப் பேய் தன் கைகளால் தொடாது அஞ்சி நடுங்கும்படியும் எறும்பு மொய்க்காதபடியும் செய்து மேல் தன் அருளாலே போரில் இவற்றியுண்டாவது உறுதியென்பதனை அறிவித்தற்கு நிமித்தமாகக் காக்கையும் பருந்தும் உண்ணும்படி செய்தது என்னும் குறிப்பு இப்பாடலில் இடம் பெற்றிருத்தலைக் கூர்ந்து நோக்குங்கால் பின் விளையவிருப்பதனை முன்னரே அறிவிக்கும் நிமித்தங்களுள் காக்கையும் ஒன்றாகத் தமிழ் முன்னோர் கருதினர் என்பது நன்கு தெளியப்படும்.

ஊர் முனையில் அமைந்த நீர்த்துறையிலே வளர்ந்து வழிப் போவார்க்குத் தடையாகவுள்ள முதிய மரமாகிய கடவுள் மரத்திலே உடன் உறைதலைப் பயின்ற கூகை; இரவுப் பொழுதிலே கூவும் கடுங்குரலோசை கேட்டார்க்கு அச்சந் தருவதாகவும் நள்ளிரவில் உறங்குவோரை நடுங்கியெழும்படி செய்வதாகவும் களவொழுக்கம் ஒழுகும் தலைவனது வருகைக்குத் தடை செய்வதாகவும் அமைந்துள்ள செய்தியினை இரவுக் குறியில் வந்து சிறைப்புறத்தானாகவுள்ள தலைவன் கேட்குமாறு தோழி கூகையை நோக்கிக் கூறும் முறையில் அமைந்தது,

“எம்மூர் வாயில் உண்டுறைத் தடைஇய