பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

153


அருமுனை யிருக்கை” (புறம்.329)

எனவரும் புறப்பாட்டடிகளாற் புலனாகின்றது. மறக்குடியிற் பிறந்தார் அனைவரும் இத்தகைய நடுகல் வழிபாடு ஒன்றினையே தமக்குச் சிறந்த தெய்வ வழிபாடாகக் கொண்டு வாழ்ந்தனர் என்பது,

“ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி

ஒளிறேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்தெனக் கல்லே பரவினல்லது

நெல்லுகுத்துப் பரவும் கடவுளும் இலமே" (புறம், 335)

எனவரும் புறப்பாட்டடிகளால் நன்கு தெளியப்படும்.

போரில் உயிர்கொடுத்துப் புகழ்கொண்ட தறுகண் மறவர்களின் பெயரும் பெருமையும் கல்லிற் பொறித்து அக்கல்லினை நட்டுத் தெய்வமாக நிறுத்தி அவ்வீரனுக்குரிய கிடுகினையும், வேலினையும் அக்கல்லின் பக்கத்தே ஊன்றி, நடுகல்லின்மேல் மயிற்பீலியைச் சூட்டி, துடியென்னும் சிறுபறையினை முழக்கித் தோப்பி நெல்லாற் செய்த கள்ளினையும் ஆட்டுக் குட்டியினையும் பலியாகக் கொடுத்து அதிரல் பூக்களைத் து வி மறவர்கள் வழிபடுவரென்பது,

“வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்

வல்லாண் பதுக்கைக் கடவுட் பேண்மார் நடுகற் பீலி சூட்டித் துடிப்படுத்துத் தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும் போக்கருங் கவலைய புலவநா றருஞ்சுரம்” (அகம். 35)

எனவும்,

“கிடுகுநிரைத் தெஃகூன்றி

நடுகல்லின் அரண்போல” (பட்டினப். 78, 79)

எனவும் வரும் தொடர்களாலும் நன்கு விளங்கும்.

- *:০ கு

இங்ங்னம் வீரர்களைத் தெய்வமாகக் குறித்த நடுகற்கள் போர் நிகழ்ந்த இடங்களிலும், சிற்றுார்ப்