பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

155


பெருமையை அறிய முயல்வர். அங்கு அமைதியாக நின்று படித்துணர விரும்புவோர் தாம் செல்லும் சுரத்தில் ஆறலை கள்வரால் தமக்கு நேரும் துன்பத்தையெண்ணிக் கல்லெழுத் தினைப் படித்துணரும் தம் முயற்சியைக் கைவிட்டு விரைந்து செல்லுதலும் உண்டு. இச்செய்தி,

"கடுங்கண் மறவர் பகழி மாய்ந் தென

மருங்குல் நுணுகிய பேன்முதிர் நடுகற் பெயர் பயம் படரத் தோன்று குயிலெழுத்து இயைபுடன் நோக்கல் செல்லா தசைவுடன் ஆறுசெல்வம்பலர் விட்டனர் கழியும்

പെരൂഖത്ര கானம்” (அகம். 297)

எனவரும் அகப்பாடற் பகுதியால் உய்த்துணரப்படும்.

நடுகல்லாகிய வீரர்களின் மனைவியர் தம் கணவரது பிரிவாற்றாமையால் நெஞ்சங் கலங்கிப் புலம்பி கூந்தல் களைந்து அணிகலன்களைக் கழித்துத் தம் கணவரைத் தெய்வமாகக் கொண்டு கைம்மை நோன்பு நோற்பர் என்பது,

"நிரையிவட்டந்து நடுகல்லாகிய

வெல்வேல் விடலையின்மையிற் புலம்பிக் கொய்ம்மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய கழிகல மகடூஉப் போல” (புறம். 261)

எனவரும் புறப்பாடற் பகுதியாற் புலனாம்.

காட்டில் வாழும் யானை வழியிடையே நெடிதாக நடப்பெற்ற நடுகல்லினை ஆளென மயங்கித் தன் கால்களால் உதைத்து நகங்கள் சிதையுற்ற செய்தி,

"அத்த நடுகல் ஆளென வுதைத்த கான யானை கதுவாய் வள்ளுகிர்

இரும்பனை யிதக்கையின் ஒடியும்” (அகம். 355)

எனவரும் அகப்பாடற் பகுதியிற் குறிக்கப்பட்டது.