பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


சக்கரப் படையினையும் வலம்புரிச் சங்கினையும் தாங்கும் பெரிய கைகளை உடைய மார்பினனாகிய மாயோன் மாவலி வார்த்த நீர் தன்கையிலே சென்ற அளவிலே நெடியோனாக உயர்ந்து மூவுலகினையும் தன் ஈரடிகளால் தாவி அளந்த செய்தி மேற்குறித்த முல்லைப்பாட்டுத் தொடரில் குறிக்கப்பெற்றுள்ளமை காணலாம்.

“அகலத்தை இடத்தே உடைய உலகத்தை வளைத்துச் சக்கரத்தோடே வலம்புரியைத் தாங்கும் பெரிய கைகளை உடைய திருமார்பிடத்தே திருமகளை வைத்தமால், மாவலிவார்த்த நீர் தன்கையிலே சென்றதாக உயர்ந்த திருமால்” எனப் பொருள் வரைந்த நச்சினார்க்கினியர், 'இதனானே முல்லைக்குரிய தெய்வம் கூறினார்’ எனக் கருத்துரைப்பர். மால் நீர் செல நிமிர்ந்தாற் போல மேகமும் நீர் செலநிமிர்ந்தது என்பதாம்.

முல்லைத்திணை ஒழுகலாற்றைக் குறித்த இப் பாடலில் முல்லை நிலத் தெய்வமாகிய திருமால் ஞாலமளந்த செய்தியை முகிலொடு புணர்த்துக் கூறிய திறம் கூர்ந்து உணர்வதற்குரியதாகும்.

திருமால் பாம்பணையிற் பள்ளி கொண்டருளிய திறத்தை உவமை வாயிலாகப் புனைந்துரைப்பது,

"நீடுகுலைக் காந்தளஞ்சிலம்பிற் களிறு படிந்தாங்கு

பாம்பணைப்பள்ளி அமர்ந்தோன் ஆங்கண்”

(பெரும்பாண். 371-373)

எனவரும் பெரும்பாணாற்றுத் தொடராகும்.

“நீண்ட பூங்கொத்துக்களை உடைய காந்தட் பூக்கள் மலர்ந்த அழகிய பக்கமலையிலே யானை கிடந்தாற்போல, பாம்பனையாகிய படுக்கையிலே அறிதுயில் கொண்டோனாகிய திருமாலின் திருக்கோயில் காஞ்சியி லுள்ள திருவெஃகாவாகிய அவ்விடத்தின் கண் அமைந் திருந்தது" என்பது இத் தொடராற் புலனாம். திருமால் அலைமறியும் பாற்கடலில் ஆதி சேடனாகிய பாம்பினை