பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

167


அணையாகக் கொண்டு அறிதுயில் அமர்ந்துள்ள தோற்றத்தினை,

“பாடிமிழ் பரப்பகத்தரவணை அசைஇய

ஆடுகொள் நேமியாற் பரவுதும்” (கலி. 105)

எனச் சோழன் நல்லுருத்திரனார் பரவிப் போற்றயுள்ளமை இங்கு ஒப்புநோக்கத் தகுவதாகும்.

திருமால் மார்பில் அம்முதல்வனது தேவியாகிய திருமகள் அமர்ந்திருக்கும் திறத்தை,

"திருமறு மார்பின் முந்நீர் வண்ணன்”

(பெரும்பாண். 29-30)

எனப் பெரும்பானாற்றுப்படையும்,

"திருவார் மார்பன்’ (மலைபடு, 355)

என மலைபடுகடாமும் குறிப்பிடும். இச்செய்தி,

“மாயவன் மார்பில் திருப்போல் அவள் சேர” (கலி. 145)

எனவும்,

'பொருமுரண்மேம்பட்ட பொலம்புகழ் நேமித்

திருமறு மார்பன்” (கலி. 104)

எனவும் வரும் தொடர்களிலும் குறிக்கப்பெற்றுள்ளமை கானலாம்.

காத்தற் கடவுளாகிய திருமால், திருவோண நாளில் அவதரித்தமையால் திருவோண நாளைத் திருமாலுக்குரிய நாளாகப் போற்றுதல் மரபு. இம்மரபு,

“கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்

மாயோன் மேய ஒன நன்னாள்”

(மதுரைக் காஞ்சி 590-591)

என மதுரைக் காஞ்சியில் இடம் பெற்றுள்ளமை காணலாம்.