பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

193


"வடாஅது

வன்புனல் தொழுநை வார்மண லகன்றுறை அண்டர் மகளிர் தண்டழை யுடீஇயர்

மரஞ்செல மிதித்த மாஅல் போல” (அகம். 59)

என வரும் அகநானூற்றுப் பாடலிற் குறிக்கப்பெற்றது. இச்செய்தியினை,

'நீலனிற வண்ணனன்று நெடுந்துகில் கவர்ந்து தம்முன்

டானிற வண்ணன் நோக்கிற் பழியுடைத் தென்றுகண்டாய் வேனிறத்தானைவேந்தே விரிபுனற் றொழுநை யாற்றுட் கோனிற வளையினார்க்குக் குருந்தவ னொசித்த

தென்றான்” (சிந்தாமணி, 209)

எனவரும் பாடலில் திருத்தக்க தேவர் விரித்துரைத்துள்ளமை காணலாம். காத்தற் கடவுளாகிய திருமால், ஆழியாகிய சக்கரப் படையினை ஏந்தியமையின் ஆழி முதல்வன், ஆழியான், திகிரிச் செல்வன், திகிரியோன், நேமியான், நேமியோன் எனவும், கரிய திருமேனியுடைமை பற்றி மாயோன், முந்நீர்வண்னன், அஞ்சன வுருவன், நீல்நிற வண்ணன் எனவும், கருடனைக்கொடியாகக் கொண்டமை பற்றிச் சேவலோங்குயர் கொடியோன், புட்கொடி விறல்வெய்யோன், புள்மிசைக் கொடியோன், புள்ளின் நீள் கொடிச் செல்வன் எனவும், திருமகளை மார்பிற் கொண்டமை பற்றித் திருமறுமார்பின் திருவமர்ச் செல்வன் எனவும், துழாய் மாலையை அனிந்தமை பற்றித் துழாயோன், துழாய்ச் செல்வன், துழாய் மார்பினோன் எனவும், பாம்பனையில் பள்ளி கொண்டமை பற்றி அரவணை அசைஇய நேமியோன், பாம்பனைப் பள்ளியமர்ந்தோன் எனவும், பாற்கடலில் அரவனை மிசை யோகநித்திரை கொள்ளும் நிலைகுறித்து அறிதுயிலோன் எனவும், குறளனாகச் சென்று மூவடி மண் வேண்டி மூவுலகும் ஈரடியால் அளந்தமை பற்றி ஞாலமூன்றடித்தாய முதல்வன்' எனவும், பொன்னாடையுடுத்தருளல் பற்றிப் பொன்புனை. யுடுக்கையோன் எனவும், வியக்கத்தக்க தோற்றமும் செயல்களுமுடைமைபற்றி மாயவன் எனவும், வேதங்களாற் போற்றப்படும் முழுமுதற் பொருளாதல் பற்றி வேதமுதல்வன்

சை. சி. ரா. வ. 13