பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

195


தோற்றத்திற்கு உவமையாக அகநானூறு 360ஆம் பாடலில் எடுத்தாளப்பெற்றுள்ளது.

“வெருவரு கருந்திறல் இருபெருந் தெய்வத்து

உருவுட னியைந்த தோற்றம் போல அந்தி வானமொடு கடலணி கெளாஅ

வந்த மாலை” (அகம். 360)

என்பது அப்பாடற் பகுதியாகும்.

பிறரை வருத்தும் அச்ாத்தினையுடைய அசுரர்கள் உலகத்திற்கு ஒளிவழங்கும் ஞாயிற்றைக் கவர்ந்து கொண்டு போய் மறைத்தார்களாக, வானத்தே ஒளிதரும் அஞ்ஞாயிற்றைக் காணாமையால் இருளானது உலகத்துயிர் களின் கண்களை மறைக்க, உலகம் துயருற்றது. உலகில் ஒளியின்மையால் அவ்வுயிர்கட்கேற்பட்ட துன்பத்தை நீக்கும் பொருட்டு, மை போலும் நிறம் வாய்ந்த திருமேனியை யுடைய திருமால், அஞ்ஞாயிற்றை மீட்டுக் கொணர்ந்து இவ்வுலகின் கண் இருள் நீங்கும்படி வானகத்து நிலை நிறுத்தினார் என்பது புராண வரலாறாகும். இதனை,

"அணங்குடை யவுணர் கணக்கொண் டொளித் தெனச்

சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது இருள்கண் கெடுத்த பருதி ஞாலத்து இடும்பைகொள் பருவரல் தீரக் கடுந்திறல் அஞ்சன வுருவன் றந்து நிறுத்தாங்கு....” (புறம், 374)

எனவரும் புறப்பாடலில் மாறோக்கத்து நற்பசலையார் எனும் புலவர் உவமையாக எடுத்தாண்டுள்ளமை இங்கு நோக்கத்தகுவதாகும்.

திருமால் இராமபிரானாக அவதரித்துத் தாதை ஏவலால் சீதையுடன் காட்டின்கண் தங்கியிருந்தபோது இராவணன் வஞ்சனையால் வேற்றுருக்கொண்டு சீதையைக் கவர்ந்து வான்வழி விமானத்தில் செல்லும்போது சீதா பிராட்டி தான் அயலானாற் கவரப்பட்டுச் செல்லும் வழியைத் தன்னைப் பிரிந்து வருந்தும் இராமபிரான் கண்டு