பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


கரியனாயினும் தன்னை அன்போடு தியானிக்கும் அடியார் களுடைய நெஞ்சத்தை விட்டு நீங்காத நிலைமையனாய் அவர்தம் உணர்விற்கு எழுந்தருளியுள்ளான் என்பது,

“காணாமரப, நீயாநினைவ’ (பரி. 3.84)

எனவரும் தொடரில் இடம் பெற்றுள்ளமை காண்க.

£4 - - - - -

காண்டற் கரிய கடவுள் கண்டாய்

கருதுவார்க் காற்ற வெளியன் கண்டாய்”

எனவும்,

“கருதுவார் இதயத்துக் கமலத்துறும் தேனவனை”

எனவும் வரும் அப்பர் அருள் மொழிகள் இங்கு ஒப்பு நோக்கத்தக்கன.

செவிமுதலாகிய பொறிகள் ஐந்தின்வழிச் செல்லும் அவா ஐந்தினையும் மயக்கமற நீக்கி மைத்திரி, கருணை, முதிதை, இகழ்ச்சி என்னும் நான்கினாலும் சித்தத்தை மாசறுத்துத் தம்மைச் சமாதியாகிய ஒருநெறிக் கண்னே செலுத்திய ஆர்வலராகிய யோகிகள் இறைவனை வணங்கி அவனது பொருள்சேர் புகழ்த் தரங்களை விரித்து விளக்கும் இயல்பினர் என்பது,

“ஐந்து இருளற நீக்கி நான்கினுள் துடைத்துத்தம்

ஒன்றாற்றுப்படுத்தநின் ஆர்வலர் தொழுதேத்தி நின்புகழ் விரித்தனர்” (பரி. 4, 1 . 3)

எனவரும் தொடரால் புலப்படுத்தப் பெற்றது.

உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத உலகப் பொருள்களில் காணப்படும் பண்புநலன்கள் அனைத்திற்கும் ஊற்றாக அமைந்தன உலக முதல்வனாகிய கடவுளின் இறைமைப் பண்புகள் என்பதனையும், உலகப் பொருள்க ளனைத்தும் திருமாலாகிய முதல்வனிடத்தே தோன்றி அவனிடத்தேயே ஒடுங்குவன என்பதனையும் விரித்து விளக்கும் நிலையிலமைந்தது,