பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


எனவரும் பரிபாடல் தொடரில் இடம் பெற்றுள்ளது. 'வீடளிக்குங்கால் நின்னினும் சிறந்த நின் தாளினையை உடையை’ என இத்தொடருக்குப் பரிமேலழகர் எழுதிய உரை விளக்கம் இக்கருத்தினைப் புலப்படுத்தல் காணலாம்.

“சேவடி படரும் செம்மலுள்ளமொடு

நலம்புரி கொள்கைப் புலம்பிரிந்துறையும் செலவுநீநயந்தனை யாயின்”

எனவரும் திருமுருகாற்றுப்படைத் தொடரும், இதற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரை விளக்கமும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கன்.

சங்க காலத் தமிழ் மக்கள் மாயோன், சேயோன், சிவன் என வேறுவேறு பெயரும், வேறுவேறு உருவும் உடைய நிலையில் பல்வேறு தெய்வ வழிபாடுகளை மேற் கொண்டிருந்தனராயினும், அங்ங்ணம் வழிபடப்பெறும் எல்லாத் திருவுருவங்களும் முழுமுதற் பொருளாகிய ஒரு பொருளுக்குரியனவே என்னும் உண்மையினைத் தெளிந்திருந்தனர். இந்நுட்பம்,

"அழல்புனர குழைகொழு நிழறரும் பலசினை

ஆலமுங் கடம்பு நல்யாற்று நடுவும் கால்வழக் கறுநிலைக் குன்றமும் பிறவும் அவ்வவை மேய வேறுவேறு பெயரோய் எவ்வயி னோயு நீயே’ (பரி. 4, 66 - 70)

எனத் திருமாலை முன்னிலைப்படுத்திக் கடுவன் இளவெயினனார் போற்றிப் பரவிய பரிபாடற் பகுதியால் இனிது புலனாகும். இங்ங்னம் பல்வேறு திருவுருவங்களில் வைத்து வழிபடப் பெறும் வழிபாடுகள், எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளாகிய ஒரு பொருளையே சென்று சாரும் என்பது,

“வேறு பல்லுருவில் கடவுள் பேணி

எனவரும் குறிஞ்சிப் பாட்டடிகளானும் உய்த்துணரப்படும்.