பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

225


“வெற்றி வெல்போர்க் கொற்றவை” எனவும்,

Éé , 3% ళొటో) జిఖీ

எனவும் போற்றப்பெறும் உமையம்மையார்க்கும் உரிய மைந்தனாகவும் இயைத்துப் போற்றப் பெறுகின்றான். தொல்காப்பியனாரால் நிலங்கடந்த நிலையிற் பொதுவாகக் குறிக்கப்பட்ட கொற்றவை என்னும் தாய்த் தெய்வம் கடவுள் எனப் போற்றப் பெறும் சிவபெருமானுக்குரிய சக்தியாகவும், முல்லை நிலத் தெய்வமாகிய மாயோனுக்குத் தங்கையாகவும், குறிஞ்சி நிலத் தெய்வமாகிய சேயோனுக்குத் தாயாகவும் எண்ணி வழிபடப் பெறும் உறவுநிலையைப் பெற்றுக் காடுகிழாளாகவும், முல்லையும் குறிஞ்சியும் திரிந்த பாலை நிலத் தெய்வமாகவும் வழிபடப்பெறுவதாயிற்று. கொற்றவை மைந்தனாகிய முருகன் அவள் தமையனாகிய திருமாலுக்கு மருகனாகப் போற்றப் பெறும் உறவுமுறை பரிபாடலில் இடம் பெற்றுள்ளமை முன்னர்க் குறிப்பிடப்பெற்றது. குறிஞ்சிக் கடவுளாகிய முருகப்பெருமான் சேயோன், செவ்வேள், நெடுவேள் என்ற பெயர்களால் சங்கச் செய்யுட்களிற் குறிக்கப் பெற்றுள்ளான். செந்நிறம் வாய்ந்த திருமேனியுடைமை பற்றிச் சேயோன் என்பதும், யாவராலும் விரும்பப்படும் அழகிய நெடிய திருமேனியை உடையனாதல் பற்றிச் செவ்வேள்-நெடுவேள் என்பதும் முருகப்பெருமானுக்குரிய திருப்பெயர்களாயின. இப்பெயர்கள் எல்லாவற்றினும் தலைமை வாய்ந்ததாகவும், மக்கள் எல்லோராலும் வழங்கப்பெறும் பொதுமையுடையதாகவும் திகழ்வது முருகன் என்னும் திருப்பெயரேயாகும். முருகு : தெய்வத் தன்மை, தெய்வத்தன்மை நிரம்பப் பெற்றவன் என்ற பொருளில் முருகன் என்ற பெயர் அம்முதல்வனுக்கு உரியதாயிற்று. முருகு என்னும் சொல் அழகு, இளமை, நறுமணம் எனப் பொருள் தரும் ஒரு சொல்லாகும். மாறாத பேரழகும், என்றும் குன்றா இளமையும், மலரின்கண் மனம் போன்று உயிர்க்குயிராய் உள்நின்று தோன்றும் தெய்வ மனமும் உடைய முழுமுதற் பொருளாகச் செவ்வேள் விளங்குதலால், குறிஞ்சிக் கிழவனாகிய அம்முதல்வனை முருகன் என்ற பெயரால் பண்டைத் தமிழ்ச் சான்றோர்.

சை, சி. சா. வ. 15