பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


குறியிறைக் குரம்பைநம் மனைவயிற் புகுதரும் மெய்ம்மலி உவகையன் அந்நிலை கண்டு முருகென உணர்ந்து முகமன் கூறி உருவச் செந்தினை நீரொடு தூஉய் நெடுவேட்பரவும் அன்னை” (அகம். 272)

எனவரும் இப்பாடற் பகுதியில் இரவுக் குறியில் வந்தொழுகும் தலைமகனை எதிர்ப்பட்ட செவிலி இளையோனாகிய அவனது எழில் நலத்தைக் கண்டு அவனைத் தன் தெய்வத் தோற்றத்தைப் புலப்படுத்த எழுந்தருளிய முருகப் பெருமான் எனவே பிறழவுணர்ந்து வழிபட்டாள் என்ற செய்தி தோழியாற் படைத்துக் கூறப்பட்டுள்ளமை காணலாம். முருகன் தன்னை வழிபடும் அன்பர்க்கு அவரவர் நினைந்த திருமேனி கொண்டு அவர்முன் காட்சி நல்குதல்,

“குருடைச் சிலம்பிற் சுடர்ப்பூ வேய்ந்து

தாம்வேண்டுருவின் அணங்குமார் வருமே”

(அகம். 158)

என்பதனாற் புலனாகும். ஐம்புலன்கள் வழியே செல்லும் உள்ளச் சிதைவின்றி எல்லாம் வல்ல இறைவனை ஒரு நெறிய மனம் வைத்து உணர்ந்து போற்றவல்ல பேரார்வமுடைய அன்பர்கள் தம்மால் வழிபடப் பெறும் தெய்வத்தைக் கண்ணாரக் கண்டு மகிழும் பெற்றியராதல் தொன்று தொட்டு இத்தமிழகத்தே நிலை பெற்று வரும் அனுபவ உண்மையாகும்.

{{ - - - * -

அழிவிலர் முயலும் ஆர்வமாக்கள் வழிபடு தெய்வம் கட்கண் டாங்கு” (நற். 9)

எனவரும் நற்றிணைத் தொடர் மேற்காட்டிய உண்மையை உவமையாக எடுத்துக் காட்டியுள்ளமை பண்டைத் தமிழ் மக்கள் காண்டற்கரிய கடவுளின் தெய்வத் தோற்றத்தைக் கண்களாற் கண்டு மகிழ்ந்த செய்தியினை நன்கு புலப்படுத்தல் காணலாம். அழகே உருவாகிய தெய்வம் முருகன். தன்னேரில்லாத் தலைமகனது எழில் நலத்தினை உவமை காட்டி விளக்கவந்த கபிலர்,