பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

243


வெறியாடல் மலைவாணர்குடியில் மனை முதிர் மகளிரால் புறத்தேயாவரும் காண ஆடப்பெறும் பொதுவிழாவாகவும் மனையத்தே வேலனைக் கொண்டு நிகழ்த்தப்பெறும் மனைவிழாவாகவும் நிகழும் இச்செய்தி,

44.

S S S S S S S S S S S S S S S CC S S S S S S S S S S S S S S S S S S குறவர் மனைமுதிர் மகளிரொடு குறவை துங்கும் ஆர்கலி விழவுக் களங்கடுப்ப நாளும் விரவுப்பூம் பலியொடு விரைஇயன்னை முருகென வேலற் றரூஉம் பருவ மாகப் பயந்தன்றால் நமக்கே” (அகம். 232)

எனவும்,

“செறிதொடி முன்கை கூப்பிச் செவ்வேள்

வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்”

(பட்டி. 154-155)

எனவும் வரும் பாடற் பகுதிகளால் அறியலாம். இத்தகைய வெறியாட்டில் முருகப் பெருமான் தனக்குப் பூசை செய்யும் வேலன்மேல் ஆவேசித்தல்போலக் கணிகாரிகையாகிய குறத்திமேல் ஆவேசித்தலுமுண்டு. இச் செய்தி,

"ஆடுமகள் வெறியுறு நுடக்கம் போல” (பதிற். 51).

எனவரும் பகுதியாலறியலாம்.

"......................................... நெடுவேள் அணங்குறு மகளிர் ஆடுகளங் கடுப்பத் திணிநிலைக் கடம்பின் திரளரை வளைஇய துணையறை மாலையின்” (குறிஞ்சிப் 174-177)

எனவரும் குறிஞ்சிப்பாட்டின் பகுதி முருகனைநோக்கி நறுமலர் மாலைகளால் புனையப் பெற்றிருக்கும் என்பதனைப் புலப்படுத்தும்.

சென்றார்க் கச்சந்தரும் தன்மையன முருகனுக்குரிய உயர்ந்த மலைகளாதலின், -