பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


இருஞ்சேற் றகல்வயல் விரிந்து வாயவிழ்ந்த முட்டாட்டாமரைத் துஞ்சியெற்படக் கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர் அம்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும் குன்றமர்ந்துறைதலும் உரியன்” (திருமுருகு 71-77)

என வரும் பகுதியில் நக்கீரனார் குறிப்பிற் புலப்பட வைத்துள்ளார். இந்நுட்பத்தினைக் கூர்ந்துணர்ந்த இளம்பூரினவடிகள், முருகாற்றுப்படையுள்,

“மாடமலிமறகின் கூடற்குடவயின்,

இருஞ்சேற் றகல்வயல் விரிந்து வாயவிழ்ந்த முட்டாட்டாமரைத் துஞ்சி”

என்றவழி ஒருமுகத்தாற் பாண்டியனையும் இதனுட் சார்த்தியவாறு காண்க” என இங்குக் குறிப்பின்விளக்கும் திறம் உய்த்துணர்ந்து போற்றத்தகுவதாகும்.

“முன்னியது முடித்தலின் முருகொத்தீயே" (புறம்.)

என்றவண்ணம் தன்னை அன்பினால் வழிபடும் அடியார்கள் எண்ணியவற்றை எண்ணிய வண்ணமே முடித்தருளும் பேராற்றல் வாய்ந்த தெய்வம் முருகப் பெருமான் என்பது சங்ககாலத் தமிழ் மக்கள் உள்ளத்தே நிலைபெற்ற உறுதியான நம்பிக்கையாகும். எல்லாம் வல்ல இறைவன் நாற்றிசையிலும் மேலும் கீழுமாக இவ்வுலகில் நிகழும் எல்லா நிகழ்ச்சி களுக்கும் சான்றாய் நோக்கியருளுகின்றான் என்பதனைப் புலப்படுத்தும் முறையில் அமைந்தது முருகப் பெருமானுக் குரிய அறுமுகத்திருமேனி ஆகும். அம் முதல்வனுடைய ஆறுதிருமுகங்களுக்கும் உரிய பொது வியல்பினையும் அவற்றுள் ஒவ்வொரு திருமுகத்திற்கும் உரிய சிறப்பியல்பினை யும் வகைப்படுத்துரைப்பது,

ÉÉ

தாவில் கொள்கைத் தந்தொழின் முடிமார் மன்னேர் பெழுதர வாணிறமுகனே மாயிருண் ஞாலம் மறுவின்றி விளங்கப் பல்கதிர் விரிந்தன் றொருமுகம் ஒருமுகம்