பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


அசுரர், தைத்தியர், கருடர், கின்னரர், கிம்புருடர், இயக்கர், விஞ்சையர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், பூதர், பைசாசகணம், தாராகனம், நாகர், ஆகாயவாசிகள், போகபூமியோர் என இவர்களாவர்.

முருகன் எழுந்தருளிய திருத்தலங்களுள் ஒன்றாகிய ஏரகம் என்பது மலை நாட்டகத்து ஒரு திருப்பதி என்பர் நச்சினார்க்கினியர். இத்திருப்பதியில் எழுந்தருளிய முருகப் பெருமானை வழிபாடு செய்யும் நான்மறைவல்ல அந்தணர் களின் இயல்பினை விரித்துரைக்கும் நிலையிலமைந்தது,

"இருமூன் றெய்திய இயல்பினின் வழாஅ திருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி அறுநான் கிரட்டி இளமை நல்லியாண் டாறினிற் கழிப்பிய வறணில் கொள்கை மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத் திருபிறப்பாளர் பொழுதறிந்து நுவல வொன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண். புலராக் காழகம் புலர வுடீஇ யுச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந் தாறெழுத் தடக்கிய வருமறைக் கேள்வி நாவியன் மருங்கி விைலப் பாடி விரையுறு நறுமலரேந்திப்பெரிதுவந் தேரகத் துறைதலும் உரியனதாஅன்று”

என்ற பகுதியாகும்.

ஒதல், ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் ஆறு தொழில்களின் இலக்கணத்தின் வழுவாமல் தாய் தந்தை எனனும் இருவர் குலத்தையும் உலகத்தார் நன்றென்று மதிக்கும் வண்ணம் உயர்ந்த குடிப்பிறப்பையும், நாற்பத்தெட்டியாண்டு வேதம் கூறிய நெறியிலே பிரமச்சரியம் காத்த அறங்கூறுகின்ற கோட்பாட்டினையும் ஆகவனியம், தக்கணாக்கினியம், காருக பத்தியம் என்னும் மூன்று தீயால் உண்டாகிய செல்வத் தினையும் நூலணிதற்குமுன் ஒரு பிறப்பும், பின் ஒரு