பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

275


பிறப்புமாகிய இரு பிறப்பினையுமுடைய அந்தணர்கள் வழிபடும் காலமறிந்து தோத்திரங்களைக் கூற ஒன்பதாகிய நூலைத் தன்னிடத்தே கொண்ட முப்புரியாகிய பூணும் நூலையும் உடையராய், நீராடுங்கால் துவைக்கப்பட்ட ஆடை உடம்பிலே கிடந்து புலரும்படி உடுத்தி தலைமேல் குவித்த கையினை உடையராய்த் துதித்து ஆறெழுத்தினைத் தன்னிடத்தே அடக்கியிருக்கின்ற அருமறையாகிய மந்திரத்தை நா அசையும் அளிவிலே பயின்று ஓதி மணமிக்க நறுமலர்களை எடுத்துத்துவி வழிபடப் பெரிதும் மகிழ்ந்து ஏரகம் என்னும் திருப்பதியிலே எழுந்தருளியிருத்தலும் உரியன் என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும். இரு பிறப்பாளராகிய அந்தணர்கள் திருவேரகத் திருப்பதியில் எழுந்தருளிய முருகப் பெருமானை வழிபட்டுப் போற்றுங்கால் ஆறெழுத்தடக்கிய அருமறைக் கேள்வி எனப்படும் ஆறெழுத்து மந்திரத்தை நாப்புடை பெயரும் அளவில் ஒதினர் என்பது,

"ஆறெழு தடக்கிய அருமறைக்கேள்வி

நாவியல் மருங்கின்நவிலப்பாடி’

எனவரும் தொடராற் புலனாம். இத்தொடரிற் குறிக்கப்பட்ட ஆறெழுத்து மந்திரம் என்பது நமோகுமாராய' என்பதாம் என நச்சினார்க்கினியர் குறிப்பிடுகின்றார்.

"நாதா குமராநமவென்றரனார்

ஒதா யெனவோ தியதெப்பொருள்தான்”

என வரும் கந்தரநுபூதியில் இம்மந்திரம் குறிப்பாகச் சுட்டப்பட்டுள்ளமை காணலாம். இனி ஆறெழுத்து மந்திரமாவது சரவணபவ” என்பது பெரும்பாலோர் கருத்தாகும்.

"ஆறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி'

என நக்கீரர் பொதுவாகக் குறிப்பிடுதலால் மேற்குறித்த இருவகை மந்திரங்களும் முருகப் பெருமானுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களாம் எனக் கொள்ளுதல்