பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

299


சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும் . . . 3393

“யாஅம் இரட்டவை

பொருளும் பொன்னும் போகமுமல்ல நின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும் உருளினர்க்கடம்பின் ஒலி தாரோயே (பரி. 5, 78-81)

எனவரும் பரிபாடற் பகுதியாகும். "தேருருள் போலும் பூங்கொத்துக்களையுடைய கடப்பமலர்களால் தொடுக்கட் பெற்ற தழைத்த மாலையை யணிந்த முருகப் பெருமானே! நின்னையாம் இர்ந்து வேண்டுபவை இவ்வுலக வாழ்க்கையில் நுகரப்படும் நுகர் பொருள்களும், அவற்றை உளவாக்கும் பொன்னும், அவ்விரண்டாலும் நுகரத்தகும் இன்ப நுகர்ச்சியும் அல்ல; எமக்கு வீடு பேற்றினை நல்கும் நின் திருவருளும், அவ்வருளைப் பெறுதற்கு இறைவனாகிய நின்பால் யாம் செய்யும் பேரன்பும், அருள் அன்பு என்னும் அவ்விரண்டினாலும் யாம் செய்தற்குரிய அறனும் ஆகிய இவை மூன்றுமேயாகும்” எனக் கடுவன் இளவெயினனா. ராகிய புலவர் பெருமான் திருப்பரங்குன்றத்தெழுந்தருளிய முருகப் பெருமான்ை நோக்கி வேண்டும் நிலையில் அமைந்த இவ்விண்ணப்பம் இறைவனது திருவருளே உலகுயிர் நிகழ்ச்சிகள் எல்லாவற்றுக்கும் ஆதாரம் என்பதும், இறைவனருளால் அன்பு மீதுரப் பெற்ற மக்கட்குலத்தால் அருளும் அன்புமாகிய இவற்றின் துணை கொண்டு செய்யப்படும் நற்செயல்களே நிலை பெற்ற அறமாம் என்பதும் ஆகிய உண்மைகளை நன்கு புலப்படுத்தல் 呜打@颐Gè有渲)。

'அருளே உலகெலாம் ஆள்விப்பதீசன்

அருளே பிறப்புறுப்பதானால் - அருளாலே மெய்ப்பெருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும் எப்பொருளும் ஆவதெனக்கு” (அற்புதத்.)

எனவரும் காரைக்காலம்மையார் வாய்மொழியும்

“அவனருளே கண்ணாகக் காணினல்லால்”

எனவரும் அப்பர் மொழியும்,