பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


குணம் என்றது பிறப்பிறப்புக்களிற்பட்டு உழலாது இறைவன் திருவடியைச் சார்ந்து என்றும் மாறாத பேரின்ப நிலையில் ரிலைபெறுதலாகிய வீடுபேற்றினை. மன்குனம் நிலை பேறாகியதன்மை, மேற்குறித்தவண்ணம் இறைவனது திருவருட் குணத்தினை ஏற்றுக்கொண்டோராகிய அற நெஞ்சத்தினரும், பெருந்தவச் செல்வர்களாகிய அடியார் களை வணங்கி அவர் வழியொழுகும் பேரன்பர்களும் ஆகிய இவர்களே இறைவனது திருவடி நிழலை அடைத்ற்கு உரியார். அத்தன்மையோரல்லது உயிர்களைச் செறுகின்ற தீய நெஞ்சத்தையுடைய கொடியோரும், அறத்தின்கண் சேராத பழி உடையோரும், கூடா ஒழுக்கத்தால் அழிந்த தவவிரதத்தை உடையோரும் “இப்பிறப்பின் நுகர்ச்சியே உண்மையெனச் கொள்ளத்தக்கது. மறுபிறப்பென்ப தொன்றில்லை" எனத் தம் மனம் போனவாறொழுகும் மடவே ரும் ஆகிய இவர்கள் இறைவன் திருவடி நீழலை யடைந்து இன்புறும் வீடுபேற்றிற்கு உரியரல்லர் என்பது பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறியினைப் புலப்படுத்தும். இக்கருத்து

“நின்குணம் எதிர்கொண்டோர் அறங்கொண்டோர்

அல்லதை மன்குணமுடையோர் மாதவர் வண்ங்கியோரல்லதை செறுதி நெஞ்சத்துச் சினம் நீடினோரும் சேரா அறத்துச் சீரிலோரும் அழிதவப்படிவத்து அயரியோரும் மறுபிறப்பில் லெனும் மடவோரும் சேரார் நின்னிழல் அன்னோரல்லது இன்னோர் சேர்வர்” (uffl. 5,7o-78)

எனவரும் பகுதியில் இடம் பெற்றுள்ளமை காணலாம்.

மன்னுயிர்களாகிய தம் இயல்பினையும், உயிர்க் குயிராய் உள்நின்றியக்கும் இறை இயல்பினையும் உள்ளவாறு உணரப் பெற்றவர்கள் இறைவன்பால் ஒன்றை வேண்டுங்கால் இவ்வாறு வேண்டுதல் வேண்டும் என அறிவுறுத்தும் நிலையில் அமைந்தது.