பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

301


மருந்துரை இருவரும் திருந்துநூலெண்மரும் ஆதிரை முதல்வனிற் கிளந்த நாதர்பன் னொருவரு நன்றிசைகாப்போரும் யாவரும் பிறரும் அமரரும் அவுனரும் மேவரு முதுமொழி லிழுத்தவ முதல்வரும் பற்றா கின்றுநின் காரணமாகப் பரங்குன்றிமயக் குன்ற நிகர்க்கும் இமயக் குன்றினிற் சிறந்து நின்னின்ற நிரையிதழ்த் தாமரை மின்னீன்ற விளங்கினரூழா ஒருநிலைப் பொய்கையோ டொக்குநின் குன்றின் அருவிதாழ் மாலைச்சுனை”

எனவரும் பரிபாடற் பகுதியாகும்.

திருப்பரங்குன்றத்திற்கும் அதன் கிழக்கேயமைந்த மதுரை நகருக்கும் இடையேயுள்ள வழியின் இயல்பையும், அவ்வழியே திருப்பரங்குன்றத்தையடைந்து முருகப் பெருமானை வழிபட வந்த அன்புடைய காதலர்களின் ஊடலும் கூடலுமாகிய இன்ப நிகழ்ச்சிகளையும் தலைமகள் ஊடலைத் தனிக்க எண்ணிய தலைவன் வையையின் மேலும் முருகன் எழுந்தருளிய பரங்குன்றின்மீதும், அங்கு வழிபடவந்த் பார்ப்பார் மீதும் சூளுற்றுக் கூற அது கண்ட தோழி அவனுடைய பொய்ச் சூளால் நேரும் துன்பங்களை நீக்க அவன்பால் அன்புடைய தலைவி முருகப் பெருமான் தலைவனது பொய்ச் சூள் கருதிச் சீற்றம் கொள்வதற்கு முன்னரே திருப்பரங்குன்றத்தில் முருகன் கோயிலில் தொங்கும் மணியைக் கையாலடித்துத் தலையால் வணங்கி, தலைவனது பொய்ச்சூளால் வரும் ஏதத்தைத் தவிர்த்தருள்க என வேண்டிக்கோடலும் ஆகிய செய்திகள் இப்பாடலில் 22 முதல் 89 முடியவுள்ள அடிகளால் விரித்துரைக்கப் பெற்றுள்ளன. இதனால் தெய்வம் எழுந்தருளிய திருத்தலத்தின் மேலும், அங்கு எழுந்தருளிய தெய்வத்தின் மீதும் தெய்வத்தைப் போற்றும் அடியார்கள் மீதும், தெய்வத்தன்மை வாய்ந்த தீர்த்தத்தின் மீதும் பொய்ச்சூள் செய்தல் இறைவன்பால் அன்பிலாதார் செய்யும் போலிச்