பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


சிவலிங்கங்களே சான்றாக உள்ளன. இந்நாட்டிற் குடி புகுந்த ஆரியரின் முன்னோர்கள் தீ மின்னல் இடி மழை முதலிய அஞ்சத்தகும் இயற்கைப் பொருள்களையும் தம் குல முன்னோராகிய இந்திரன் முதலியோரையும் தெய்வமாகக் கொண்டு தம் முன்னோர் பாடிய பாடற்றொகுதியாகிய வேதமந்திரங்களாற் பலவகை வேள்விகளைச் செய்து அவ்வேளவிகளிற் பசு ஆடு முதலிய விலங்கினங்களைக் கொன்று பலியாக இட்டு வழிபட்டனர். வேதநெறிப்படி ஆரியர்கள் நிகழ்த்திய இவ்வேள்விகள் யாவும் உலகிற்கு முழுமுதற் கடவுள் ஒன்றே யென்னும் மெய்யுணர்வின் திறத்தாற் செய்யப்பட்டன அல்ல; பகைவர்காளல் தமக்கு நேரும் அச்சங்காரணமாகவும் தமது பகைவரையழித்து இவ்வுலகிற் பல்வேறு நுகர்ச்சிகளையும் தாமே பெற்று மகிழ்தல் வேண்டும் என்னும் ஆசை காரணமாகவும் செய்யப்பட்டனவே. ஆரியர் இந்நாட்டிற் குடியமர்ந்தநிலையில் மக்கள் தாம்தாம் பெறவேண்டிய பதவிகளை விரும்பிப் பசு ஆடு முதலியவற்றைக் கொன்று ஊனுங்கள்ளும் படைத்துச் செய்யப்படும் வேள்விகளை இந்நாட்டிற்றோன்றிய அருளாளர்களாகிய கெளதம புத்தர், மகாவீரர் முதலிய பெருமக்கள் கடுமையாக எதிர்த்தனர். அப்பெருமக்கள் கொலை வேள்விகளைக் கண்டித்து மக்களுள்ளத்தே மெய்யுணர்வும் எல்லாவுயிர்கட்கும் இன்னல் செய்யாமையாகிய அருளொழுக்கமும் நிலைபெறச் செய்தனர். உயிர்க்கொலை சூழும் வேதவேள்விகளைக் கண்டிக்கும் நிலையில் அப்பெருமக்களால் வடநாட்டில் அறிவுறுத்தப் பெற்ற தத்துவக் கொள்கைகள் முறையே பெளத்தமும் சமணமும் ஆகும். வடநாட்டிற் புத்த சமண மதங்களின் தாக்குதலால் வலிவிழந்த ஆரியர்களிற் சிலர் தென்னாடு போந்து எழுதாக்கிளவியாகத் தாம் ஒதிவரும் வேதமந்திரங்களின் பயிற்சியினால் தமிழ் வேந்தர்களால் நன்கு மதிக்கப்பெற்று இராசசூயம் முதலிய வேள்விகளைத் தமிழகத்திலும் செய்யத் தொடங்கினர். அந்நிலையில் வடநாட்டிற்றோன்றிய புத்தமத்தினைப் பின்பற்றிய சான்றோர்களும் சமண மதங்களைப் பின்பற்றிய சான்றோர்களும் தமிழகத்திற் சிற்றுார்களிலும் பேரூர்களிலும் நிலைகொண்டு அருட்பண்புக்கு மாறாக ஆரியர்கள்