பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவ வழிபாட்டின் தொன்மையும் உலகளாவிய விரிவும்

23


நாட்டில் உள்ள தெய்வ வழிபாடுகளுள் தொன்மையும் தலைமையும் வாய்ந்தது சிவலிங்க வழிபாடு என்பதனையும் நன்கு வலியுறுத்துவதாகும்.

இலிங்க அடையாளம் தீ மேனியனாகிய சிவபெருமானது ஒளிப்பிழம்பாகிய அருவுருவத் திருமேனி யைக் குறிப்பது, தமிழகத்தில் தொடக்க காலத்தில் நடுதறியாகத் துணுருவில் வழிபடப் பெற்றது, அண்டம் பிண்டம் அகண்டம் ஆகிய அனைத்திலும் அறியாமை இருளை நீக்கி ஞானவொளி பரப்பும் சோதிப் பிழம்பாகக் கருதி வழிபடப் பெறுவது. இவ்வுண்மை வடமொழியிலுள்ள இலிங்கபுராணத்தாலும் திருநாவுக்கரசர் அருளிய இலிங்கபுராணத் திருக்குறுந்தொகையாலும் இனிது விளங்கும்.

சைவ சமயத்திற் பிறந்து சிவபெருமனை வழிபட்டு வந்த தாய் தந்தை ஆகியோர்க்குத் தவப்புதல்வராகத் தோன்றியவர் ததாகதர் என்னும் சிறப்புப் பெயரினராகிய புத்தர் பெருமான். இவர் குழந்தையாயிருந்தபோது தம் தந்தையருடன் சிவபிரான் கோயிலுக்குச் சென்றதாகப் பழைய கல்வெட்டு ஒன்று கூறுகின்றது. கெளதமபுத்தராகிய இவர் தமது அரச வாழ்வினைத் துறந்து மன்னுயிர்கள்பால் அருளுடையராய் உலகம் உய்ய அறிவுரைகளை உபதேசித்து வந்தார். ஆரியப் பார்ப்பனர் வேட்டுவந்த உயிர்க்கொலை வேள்விகள் நிகழவொட்டாமல் தடுத்து அருளொழுக்க நெறியினை விரைந்து பரவச் செய்தார் என்பது வரலாறு.

புத்தசமயத்தினை இந்திய நாட்டிலும் கடல்கடந்த வெளிநாடுகளிலும் பரப்பிய வேந்தர் பெருமானாகிய அசோகன், சிவபெருமானையே வழிபட்டவன் என்பது வின்சன்ஸ்மித் என்னும் வரலாற்று ஆசிரியர் கூற்றால் இனிது விளங்கும்.

ஆரியர் இந்திய நாட்டிற் குடிபுகுதற்கு நெடுங் காலத்திற்கு முன்பே சிவலிங்க வழிபாடு சிறந்து விளங்கிய தென்பதற்குப் பஞ்சாப் மாநிலத்தில் அரப்பா, முகிஞ்தரோ ஆகிய இடங்களில் அகழ்ந்தெடுக்கப் பெற்றுள்ள