பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

324

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


உருவங்களில் வைத்து வழிபடப்பெறும் எல்லாத் தெய்வங்களும் முழுமுதற் கடவுளாகிய ஒரு பொருளின் பல்வேறு கோலங்களே யென்பதும் இவ்விடங்களில் நிகழ்த்தப்பெறும் பூசையும் திருவிழாக்களும் ஆகிய நிகழ்ச்சிகள் யாவும் உலகமக்கள் எல்லோருடைய நலங்களையும் உளத்துட் கொண்டு நிகழ்த்தப்பெறும் பொதுநலச் செயல்களே என்பதும் நன்கு புலனாதல் காணலாம்.