பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ வுண்மைகளும்


சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடுகளில் எல்லாத் தெய்வ வழிபாடுகட்கும் தலைமை யானதாகவும் குறிஞ்சி முல்லை முதலிய நில எல்லையைக் கடந்த விரிவுடையதாகவும் விளங்கும் சிறப்புடையது சிவவழிபாடு ஒன்றேயாகும். பண்டை நாளிற் போர் மறவர்களால் வழிபடப் பெற்ற கொற்றவையாகிய வனதுர்க்கையும், தியோரைச் சினந்தழிக்கும் காடுகிழாளாகிய காளியும், ஆருயிர்கட்கெல்லாம் அப்பனாகிய இறைவனொடு பிரிவின்றி அவனது ஒரு கூறாகியமர்ந்து அருள்சுரக்கும் அம்மையாகிய மலைமகளும் என உலகமக்களால் வழிபடப் பெறும் மூவகைத் திருமேனியும் நுதல் விழிநாட்டத் திறைவனாகிய சிவபெருமானுடன் பிரிவின்றியுள்ள சிவசத்தியே என்பது பண்டைத் தமிழர் துணியாகும். இவ்வுண்மை,

“வெள்ளேறு.

வலவயின் உரிய பலர்புகழ் திணிதோள்

உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண்

மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்”

(திருமுருகு. 151-154)

எனத் திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளை உமையொரு பாகனாகவும்,

“நெடும்பெருஞ்சிமையத்து நீலப் பைஞ்சனை

ஐவருள் ஒருவன் அங்கை யேற்ப அறுவர் பயந்த ஆறமர் செல்வ ஆல்கெழு கடவுட் புதல்வ மால்வரை

மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே