பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ...

373


அறியப்படும் அப்பொருள் உலகத்துப் பொருள்கள் போல அழியுமியல்பின தாகிய அசத்து எனப்படும், உணராது எனின் (பதிப் பொருளாகிய அது எவ்வகையாலும் நம்மால் அறியப்படாத பொருள் என்றால் அது முயற்கோடு போல இல்பொருளாய் (சூனியமாய்) விடும். இருதிறன் அல்லது (ஆதலால்) அசத்து, சூனியம் எனப்படும் இவ்விரு பகுதியுமன்றி, இரண்டு வகையின் சிவசத்தாம் என மன்னுலகு இசைக்கும் - பாசஞான பசுஞானங்களால் உணரப்படாமையும் பதிஞானத்தாலே உணரப்படுதலும் ஆகிய இரண்டுவகையாலும் சிவசத்தாம் என்று மெய் யுணர்வின் நிலைபெற்றோர் அதன் சிறப்பிலக்கணம் கூறுவர் - என்பது இச்சூத்திரத்தின் பொருளாகும். கலையறிவாகிய பாசஞானத்தாலும் உயிருணர்வாகிய பசு ஞானத்தாலும் உணரப்படாத துய்மையும் என்றும் ஒரு தன்மையதாய் பதிஞானத்தால் அறியப்படும் உள்பொருளாந்தன்மையும் பற்றிக் கடவுளைச் சிவசத்து என்றார். இங்ங்னம் குறையுணர்வாகிய பசு அறிவாலும் பாச அறிவாலும் அறியப்படாத முதல்வனை அவனது திருவடி ஞானத்தால் தன்னறிவின் கண்ணே ஆராய்ந்து தெளிக” என அறிவுறுத்துவது,

{{ - - - -

ஊ.ணக்கண் பாசம் உணராப் பதியை

ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி" (சிவஞானபோதம், சூ, 9) எனவரும் சிவஞானபோத ஒன்பதாஞ் சூத்திரமாகும்.

இனி, ஆறறியந்தனர்' என்புழி ஆறு' என்னும் எண்ணுப்பெயர் ஆகுபெயராய் ஆறு அங்கங்களையும் உணர்த்தியது. ஆறங்கமாவன : நிருத்தம், வியாகரணம், கற்பம், கணிதம், பிரமம், சந்தம் என்பன. ஆறங்கங்களாலும் அரியமறைப்பொருளை அறிய வல்லார் என்பார் ஆறறி யந்தனர்' என்றார். "அந்தத்தை அனைவுவார் அந்தனர், என்றது, வேதாந்தத்தையே மேற்கொண்டு பார்ப்பார் என்றவாறு” என்பர் நச்சினார்க்கினியர். அழகிய தண்ணளி யையுடைய அறவோர் எனினும் அமையும்.

இக்கலிப்பாடலின் மூன்று தாழிசைகளிலும்