பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


முறையே கொடுகொட்டி, பாண்டரங்கம், காபாலம் எனச் சிவபெருமான் ஆடிய மூன்று திருக்கூத்துக்களும், அவற்றுக்குச் சிறப்புரிமையுடைய சீர், துக்கு, பாணி என்னும் தாளக் கூறுபாடுகளும் பற்றிய செய்திகள் விரித்துரைக்கப் பெற்றன.

அவற்றுள் கொடுகொட்டி என்பது, பதினோ ராடலுள் ஒன்று, சிவபெருமான் ஆடியது, இறைவன் எல்லாவுலகங்களையும் அழித்து நின்றாடுதலின் கொடுங் கொட்டி என்னும் பெயர்த்தாயிற்று. “கொடுங்கொட்டி கொடுகொட்டியென விகாரமாயிற்று. எல்லாவற்றையும் அழித்து நின்றாடுதலின் கொடுங்கொட்டி என்றார்.

“கொட்டியாடற்கேற்றம் ஒட்டிய

உமையவள் ஒருபாலாக ஒருபால் இமையா நாட்டத் திறைவனாகி அமையா உட்கும் வியப்பும் விழைவும் பொலிவும் பொருந்த நோக்கிய தொக்க அவுண்ர் இன்னுயிர் இழப்பு அக்களம் பொலிய ஆடினன் என்ப மற்றதன் விருத்தங் காத்தற் பொருளொடு கூடிப் பொருத்த வரூஉம் பொருந்திய பாடல் திருத்தகு மரபிற்றெய்வத் துதிப்பே'

இதனான் உணர்க” என நச்சினார்க்கினியர் எடுத்துக் காட்டிய விளக்கமும் உரைச் சூத்திரமும் கொடுகொட்டி யாடலின் இயல்பினைப் புலப்படுத்தல் காணலாம்.

தேவர்கள் திரிபுரம் எரிய வேண்டுதலால் வடவைத் தியைத் தலையிலேயுடைய பெரிய அம்பு ஏவல்கேட்ட அளவிலே (சுட்ட அளவிலே) அப்புரத்தில் அவுனர்வெந்து வீழ்ந்த வெண்பலிக்குவையாகிய பாரதியரங்கத்திலே (சுடுகாட்டிலே) உமையவள் ஒருபாகத்தினளாய் நின்று பாணி, தூக்கு சீர் என்னும் தாளங்களைச் செலுத்த எல்லாத் தேவரினும் உயர்ந்த மகாதேவனாகிய இறைவன் வெற்றிக்களிப்பாற் கைகொட்டி நின்று ஆடியது கொடுகொட்டி என்னும் ஆடலாகும். இதனியல்பினை,