பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ...

377


“தலை அங்கை கொண்டு நீ காபாலம் ஆடுங்கால்”

என வரும் லித்தொகைத் தொடர்களாலும், "அழித்தற் றொழிலை நிகழ்த்துசின்ற காலங்களிலே பாணியுந் தூக்குஞ் சீரும் என்று சொல்லப்பட்ட இவையிற்றை மாட்சிமைப் பட்ட அணியினையுடைய உமாதேவி காப்ப ஆடி” எனவரும் நச்சினார்க்கினியர் உரையாலும் நனகு புலனாம்.

சிவபெருமான், தன்கையில் ஒலிக்கின்ற துடி யென்னும் பறையானது, பலவகை வாத்திய ஒலிகளையும் ஒலியா நிற்க, (த னால் தோற்றுவிக்கப்பட் - கட்புலனாய பலவடிவுகளையும் மீட்டுத் தன்னிடத்தே ஒடுக்கிக் கொண்டு, உமாதேவியா தன் ஒரு பாகத்திலேயடங் ஊழி முடிவிலே கொடுகெர்ட்டி என்னும் கூத்தினை ஆடியருள்வன் என்பது, "படுபறை பலவியம்பப் பல்லுருவம் பெயர்த்து நீ, கொடுகொட்டி ஆடுங்கால்" என ஆசிரியர் சிவபெருமானை முன்னில் லப்படுத்துப் போற்றுந் தொடரால் அறிவுறுத்தப் பட்டது. இத்தொடர்ப் பொருளைக் கூர்ந்து சிந்திக்குங்கால், பல்வேறு உலகங்களையும் முதன் முதற் படைத்த முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானே பேரூழி முடிவில அவ்வுலகங்களை யெல்ல ம் மீட்டுத் தன் கண் ஒடுங்கச் செய்பவன் என்பதும், எனவே மகா சங்கார காரணனாகிய இறைவனே உலகங்களைத் தோற்றுவிக்கும் நிமித்த காரனன் என்பதும் இக்கடவுள் வாழ்த்தினைப் பாடிய ஆசிரியர் நல்லுந்துவனார் கொண்ட தத்துவக்கொள்கை என்பது இனிது விளங்கும். சிவ நெறிபற்றி இவ்வாசிரியர் அறிவுறுத்திய இக்கொள்கை, இவ்வாசிரியர் பாடிய நெய்தற்கலி பன்னிரண்டாம் பாடலிலும் நன்கு விளக்கப்பெற்றுள்ளமை காணலாம்.

கதிரவன் நாட்காலையிலே தன் கதிர்க்கற்றைகளை உலகிற் பல விடங்களிலும் பரப்பிட் பகல் முடிவிலே தன் கதிர்களையெல்லாம் மீட்டுத் தன் பால் ஒடுக்கிக் கொள்ளுதலாகிய செயலுக்கு, உலகினைப் படைத்த iரிதல்வன் ஊழி முடிவில் அவ்வுலகங்களையெல்லாம்