பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


"ஞாலம் நாறு நலங்கெழு நல்லிசை

நான்மறை முதுநூல் முக்கட்செல்வர் ஆலமுற்றங் கவின்பெறத்தைஇய பொய்கைசூழ்ந்த பொழில். . . . .

புகாஅர் நன்னாட்டதுவே" (அகம், 181)

எனவரும் அகநானூற்றுப்பாடற்பகுதியால் அறியப்படும்.

பாண்டிநாட்டின் தலைநகராகிய மதுரையில் சிவபெருமானுக்கு ஏழு நாள் திருவிழர் நடந்தது என்பதும், ஏழாம் நாளின் அந்திக்காலத்தில் நாட்டு மக்கள் தீவினை நீங்கத் தீர்த்தமாடினர் என்பதும்,

“கழுநீர்கொண்ட எழுநாளந்தி

ஆடுதுவன்று விழவின் நாடார்த்தன்றே" (மதுரைக். 427-428)

எனவரும் மதுரைக் காஞ்சித் தொடராற் புலனாகும். "தீவினையைக் கழுவுதற்குக் காரணமான தீர்த்தநீரைத் தன்னிடத்தே கொண்ட ஏழாம்நாளின் அந்திக்காலத்தே வெற்றிநெருங்கும் திருவிழாவிற்குத் திரண்ட நாட்டி லுள்ளோர் ஆர்த்த ஆரவாரம்" என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும். "கால்கொள்ளத்தொடங்கிய ஏழாம் நாள் அந்தியிலே தீர்த்தமாடுதல் மரபு” என்றார் நச்சினார்க்கினியர். இனி, 'ஏழுநாள் அந்தி’ என்பதற்கு 'ஏழாம்நாளின் அந்திப்பொழுது எனப் பொருள் கொள்ளாமல் 'ஏழாம்நாளின் அந்தத்தில் (முடிவில்), அஃதாவது எட்டாம் நாளில் தீர்த்தமாடுதல் மரபு எனக் கொள்ளுதல் பொருத்தமுடையதாகும் இம்மரபு,

"தீர்த்தமாம் அட்டமி.முன்சீருடை ஏழுநாளுங்

கூத்தராய் வீதிபோந்தார் குறுக்கை வீரட்டனாரே'

என வரும் திருநாவுக்கரசர் தேவாரத்திற் குறிக்கப் பெற்றுள்ளமை இங்கு ஒப்புநோக்கியுணர்தற்குரியதாகும்.

அவிர்சடை முனிவர்

சங்கவிலக்கியத்திற் கூறப்படும் அவிர்சடைமுனிவர்