பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ...

391


இப்பாடல் களில் ஊன்றியிடங்கொண்டு பரவியுள்ளமை நன்கு தெளியப்படும்.

கோயில்களும் திருவிழாக்களும்

தமிழகத்திற் பேரூர்களிலும் சிற்றுார்களிலும் சிவபெருமானுக்குரிய திருக்கோயில்கள் நிலைபெற்றிருந் தன. சங்ககாலத்தில் ஆட்சிபுரிந்த சோழன் செங்கணான் சோணாட்டிலுள்ள அகநாடுகள் தோறும் சிவபெரு மானுக்கு மாடக்கோயிலைக் கட்டினான் என்ற செய்தி திருத்தொண்டர் புராணத்தில் விரித்துரைக்கப்பெற்றது. கோச்செங்கனான் கட்டிய மாடக்கோயில்களிற் பல மூவரருளிய தேவாரத்திருப்பதிகங்களில் ஆங்காங்கே போற்றப்பெற்றுள்ளமை காணலாம். கோச்செங்கட் சோழன் சிவபெருமானுக்கு எழுபது மாடக்கோயில்களைக் கட்டியுள்ளான் என்பதும் சிறந்த சிவனடியானாகிய அவ்வேந்தர் பெருமானே திருநறையூர் மணிமாடமாகிய திருமாலுக்குரிய திருக்கோயிலையும் கட்டியுள்ளான் என்பதும்,

"இருக்கிலங்குதிருமொழி வாய் எண்தோளிசற்கு

எழில்மாடம் எழுபது செய்துலக மாண்ட திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்தகோயில்

திருநறையூர்மணிமாடம் சேர்மின்களே”

(பெரியதிருமொழி, 6-3-8)

எனவரும் திருமங்கையாழ்வார் அருளிச் செயலால் அறியப்படும்.

சோழநாட்டின் அகநாடுகளுள் ஒன்றாகிய புகார் நாட்டில் உலகம் முழுதும் பரவிய பொருள்சேர்புகழ்த்திறம் வாய்ந்த நான்மறைகளைத் திருவாய்மொழிந்தருளிய முக்கட் செல்வராகிய சிவபெருமானுக்குரிய திருக்கோயில் ஆலமுற்றம் என்ற இடத்தில் அழகுபெற அமைந்திருந்த தென்பதும் அக்கோயிலையடுத்துப் பொய்கையும் அதனைச் சூழச்சோலையும் அமைந்திருந்தன என்பதும்,