பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ...

395


ஒருநாளில் எழுவரைத் தலைவராக எய்தியதனையொத்து நிலைமாறும் தன்மையதாகும். இவ்வுலகத்தையும் மக்கள் மேற்கொள்ளவேண்டிய தவத்தையும் இவற்றுள் எது சிறந்தது எனச் சீர்துக்கிப் பார்ப்போமானால் இவ்வுலகம் தவத்தொடு வைத்து நோக்க வெண்சிறுகடுகளவும் நிறை நிற்பதன்றாம். ஆதலால் வீட்டின்பம் பெற விரும்பியோர் மனைவாழ்க்கையைத்துறந்து தவத்திற் புகுந்தார். அதனால் உலகப் பற்றினை விட்டோராகிய அவரைச் செல்வத்திற்குத் தெய்வமாகிய திருமகள் கைவிடமாட்டாள். உலகப் பற்றினை விடாத ஏனையோர் இத்திருமகளாற் கைவிடப் பட்டவர்களே” என்பது இப்பாடலின் பொருளாகும்

இறைவன் திருவருளையே விரும்பி ஏனைப் பொருள்களிற் பற்று விட்டவர்களையே எல்லாச் செல்வங்களும் விரும்பித் தொடரும் என்பது,

“நின்னையே தான்வேண்டி நீள் செல்வம் வேண்டாதான்

தன்னையே தான்வேண்டும் செல்வம்”

(திவ். பெருமாள் திருமொழி 5

எனவரும் குலசேகரப் பெருமாள் அருளிச் செயல் உல

பற்றினைத் துறந்து பற்றற்றானைப் பற்றுதலால் வ. பயனைப் புலப்படுத்தல் காணலாம்.

முக்கோலந்தனர்

எவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுகும் அறவோராகிய இவர்கள் உறியிலே தங்கின. கமண்டலத் தையும் மூன்று கோல்களை ஒன்றாகச் சேர்த்துக் கட்டின முக்கோலையும் முறைமைப்படத் தோளிலே சார்த்திக் கொண்டு வெயில் வெம்மையினைத் தாங்கும் குடையினை யேந்திக் கொண்டு வெம்மையுடைய காட்டின்கண்ணே செல்லும் துறவிகளாவர். இவர்கள் கொண்டுள்ள முக்கோல் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத் தொழிலுக்குரிய அயன் அரி அரன் என்னும் மூவரும் வடிவினாலும் தொழிலினாலும் வேறுபடினும் முழுமுதற் கடவுளாந் தன்மையில் ஒருவரே யென்பதனை யுணர்த்தும் அடையாளமாகும். இந்நுட்பம் உரைசான்ற முக்கோலும்'