பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


என்ற கலித்தொகைத் தொடர்க்கு "அரிஅயன் அரன் அமைந்த முக்கோலையும்” என நச்சினார்க்கினியர் எழுதிய உரையால் நன்கு புலனாதல் காணலாம். இவர்தம் இயல்பினை விரித்துரைக்கும் முறையில் அமைந்தது,

"எறித்தரு கதிர்தாங்கி யேந்தியகுடைநீழல்

உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்றமுக்கோலும் நெறிப்படச் சுவல் அசைஇவேறேரா நெஞ்சத்துக் குறிப்பேவல் செயல் மாலைக்கொளைநடை அந்தணி”

(கலி.3)

எனவரும் பாலைக்கலியாகும.

"எறித்தலைச் செய்கின்ற ஞாயிற்றின் கதிர்களைத் தாங்குகையினாலே எடுக்கப்பட்ட குடைநீழலிலே உறியிலே தங்கின. கமண்டலத்தையும் சொல்லுதல் அமைந்த முக்கோலையும் முறைமைப்படத் தோளிலேவைத்து (முத்தொழில் புரியும் கடவுளர் மூவரையும் ஒருவராக வல்லது) வேறாக நினையாத நெஞ்சத்தாலே (ஐம்பொறியும்) மனக்குறிப்பின்படி ஏவல் செய்யும் கோட்பாட்டையும் ஒழுக்கத்தையும் உடைய அந்தணர்களே” என்பது மேற்காட்டிய தொடரின் பொருள். வேறொராநெஞ்சத்து’ என்பதற்கு "அரிஅயன் அரன் என்னும் மூவரையும் ஒருவனாக அல்லது வேறாக நினையாத நெஞ்சத்தாலே” எனவும், குறிப்பு ஏவல் செய்மாலைக் கொளை நடை அந்தணிர்’ என்பதற்கு ஐம்பொறியும் நுமக்கு ஏவல் செய்தலை இயல்பாகவுடைய கோட்பாட்டையும் ஒழுக்கத்தையும் இயல்பாகவுடையீர்’ எனவும் நச்சினார்க்கினியர் எழுதிய உரைவிளக்கம் மிகவும் பாராட்டுதற்குரியதாகும்.

முக்கோற்பகவராகிய இவர்கள் காவிக்கல் பொடி யில் தோய்த்தெடுத்த கல்லாடையினையுடுக்கும் தவக் கோலம் உடையர் என்பது,

"கற்றோய்த் துடுத்த படிவப்பார்ப்பான்

முக்கோல் அசைநிலை கடுப்ப” (முல்லைப். 36-37)