பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


வினையுணர்வின் பயனாகத் தம் வாழ்விற் கடைப்பிடித்து வரும் கொள்கைகளாக, வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்று மிலமே, முனிவின் இன்னாதென்றலும், மாட்சியிற் பெரியோரை வியத்தலுமிலமே, சிறியோரை யிகழ்தல் அதனினும் இலமே என்பவற்றைக் கணியன் பூங்குன்றனார் தம் வாழ்வியல் அனுபவத்தில் வைத்து எடுத்துக்காட்டி யுள்ளமை காணலாம். வினையுணர்வு பற்றிய இம்முடிவுகள் கடவுளுண்மையினையுடம் படாது உயிர்கள் உண்டெனக் கொண்ட சமணம் முதலிய பிற சமயங்களுக்கும் ஒத்தனவே யாகும். எனினும் கடவுளுண்மையினை வற்புறுத்தும் சமயங்களுக்கு வினையுணர்வு பற்றிய இம்முடிவுகள் மிகவும் சிறப்புரிமையுடையனவென்பது பால்வரை தெய்வம் வினையே பூதம்’ எனவரும் தொல்காப்பியத் தொடர்ப் பொருள் பற்றி முன்னர்க்கூறிய விளக்கத்தாற் புலனாகும். படைப்புக் காலந்தொடங்கி மன்னுயிர்கள் வினைவயத்தாற் பல்வேறிடங்களிலும் பல்வேறுடம்புகளிலும் பிறந்திறந்து அலமரும் நிலையில், அவ்வுயிர்களுக்கு யாதும் ஊராகவும் யாவரும் உறவினராகவும் அமைந்துள்ள திறத்தினை

భీశ

அகில லோகமும் அனந்தயோனியும் நிகிலமும் தோன்ற நீநினைந்தநாள்தொடங்கி எனைப்பல யோனியும் நினைப்பரும் பேதத்து யாரும் யாவையும் எனக்குத் தனித்தனித் தாயராகியும் தந்தையராகியும் வந்திலாதவர் இல்லை யான் அவர் தந்தையராகியும் தாயராகியும் வந்திராததும் இல்லை, முந்து பிறவாநிலனும் இல்லை அவ்வயின் இறவா நிலனும் இல்லை”

(பதினொராந்திருமுறை,

திருக்கழுமல மும்மணிக்கோவை, 7)

எனத் திருவெண்காட்டடிகள் விரித்துக் கூறியுள்ளார். இங்கு எடுத்துக்காட்டிய திருக்கழுமல மும்மணிக்கோவைப் பாடற்பகுதி 'யாதும் ஊரே யாவருங் கேளிர்’ எனவரும் புறநானூற்று அடிக்குரிய உரைவிளக்கமாகத் திகழ்தல்