பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் . . .

417


கடவுள் உயிர் உலகம் என்னும் முப்பொரு ளுண்மையினை வற்புறுத்தும் சைவ சித்தாந்தத் தத்துவக் கொள்கை செந்தமிழ் நாட்டில் வாழ்ந்த திருமூலர், மெய்கண்டார் முதலிய அருளாசிரியர்களால் அறிவுறுத்தப் பெற்றதென்பதும், தமிழ்நாட்டிற்கே சிறப்புரிமையுடையதாக உருவாகி வளர்ந்துள்ள இத்தத்துவக் கொள்கைக்குரிய வேர்கள் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் முதலிய தமிழ்த் தென்னூல்களில் ஆங்காங்கே ஆழ்ந்து ஊன்றிப்பரவி இடம் பெற்றுள்ளன என்பதும் தொல் காப்பியம் திருக்குறள் முதலிய பண்டைத் தமிழ் நூல்களையும் சைவத் திருமுறைகளையும் அவற்றின் பயனாகத் தோன்றிய சைவசித்தாந்த சாத்திரங்களாகிய மெய்கண்டநூல்கள் பதினான் கினையும் ஒப்பிட்டு ஆராய்வார்க்கு இனிது விளங்கும். மெய்கண்ட் நூல்கள் பதினான்கனுள் ஒன்றாகிய திருவருட்பயன் என்பது, சைவசமய சந்தான ஆசிரியர் நால்வருள் ஒருவராகிய உமாபதி சிவாச்சாரியாரால் இயற்றப்பட்ட எட்டு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் தெய்வப் புலவர் திருவள்ளுவர் அருளின தமிழ் மறையாகிய திருக்குறளை அடியொற்றி இயற்றப்பெற்றதென்பது இதன்கண் உள்ள குறள் வெண்பாக்களின் சொற்பொரு ளமைப்பாலும், பத்துக்குறள் கொண்ட து ஒர் அதிகாரமாக அமைந்த அதிகாரத்தொடர்பாலும் இந்நூலின் முதற்கண் உள்ள பதிமுதுநிலை என்னும் அதிகாரம் திருக்குறளின் முதலதிகாரமாகிய கடவுள் வாழ்த்தினைச் சொற்பொருட் கூறுகளால் அவ்வாறே அடியொற்றியமைந்திருத்தலாலும் திருவள்ளுவர் அகரமுதல’ எனத் திருக்குறளைத் தொடங்கியது போலவே இந்நூலாசிரியரும் அகர வுயிர்போல்’ என இந்நூலைத் தொடங்கியிருத்ததலாலும் நன்கு துணியப்படும்.

திருவள்ளுவர் தாம் இயற்றிய திருக்குறளில் வீடு பேறடைவார் உணர்ந்து கொள்ளுதற்குரிய மெய்யுணர். வுண்மைகளை ஆங்காங்கே குறித்துள்ளமையுணர்ந்த உமாபதி சிவாச்சாரியார், சைவசித்தாந்தத் தத்துவத்திற்கு அடிப்படையாக அமைந்த அவ்வுண்மைகளை விரித்து விளக்கும் நோக்குடன் திருவருட்பயன் என்னும் சைவ

சை. சி. சா. வ, 27