பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


எனக் காண்டற்கரிய கடவுளின் உண்மையினைக் கருத லளவையால் நிறுவிப்போந்தார். ‘எழுத்துக்கள் எல்லாம் தம்மை உடனிருந்து செலுத்தும் அகரவொலியினைத் தமக்கு முதலாகவுடையன. அதுபோல உலகமும் தன்னை உடனிருந்து இயக்கி நிற்கும் ஆதி பகவனாகிய இறைவனைத் தனக்கு முதலாகவுடையது” என்பது இதன்பொருள்.

இங்கு உலகு என்றது, உடம்பொடு காணப்படும் உயிர்த்தொகுதியினை. ஓர் வரையறையுடன் காணப்படும் இவ்வுலக இயக்கமாகிய காரியத்தினைக் கொண்டு இதற்கு நிமித்த காரணமாகிய பொருள் ஒன்று உண்டு எனத் துணிய வேண்டியிருத்தலால் ‘உலகு ஆதி பகவனை முதலாக வுடையது என உலகின் மேல் வைத்துக் கடவுளது உண்மை யினைப் புலப்படுத்தினார் ஆசிரியர். ஆயினும் தனக்கு முதல்வனாக ஆதிபகவனைத் தேர்ந்து கொள்ளும் உணர் வுரிமையும் உடைமைத்தன்மையும் உலகிற்கு இன்மையால், ‘உலகிற்கு முதல்வன் ஆதிபகவன் என்பதே இத்திருக்குறளின் கருத்தாகக் கொள்ளுதல் வேண்டும்’ என விளக்கம் கூறினார் பரிமேலழகர். ஆசிரியர் தொல்காப்பியனாரும்,

“எழுத்தெனப் படுப, அகர முதல” (நூன்மரபு 1)

எனவும், மெய்யின் இயக்கம் அகரமொடு சிவனும் (மொழி. 13) எனவும் வரும் நூற்பாக்களில் எழுத்துக்கள் எல்லாவற்றின் இயக்கத்திற்கும் காரணமாய் நிற்கும் அகரம் முதன்மை யுடையதாதலைத் தெளிவாகக் குறித்துள்ளார். "அகரம் தனியே நிற்றலானும் பல மெய்க்கண்நின்று அவ்வம் மெய்கட்கு இசைந்த ஒசைகளைப் பயந்தே நிற்றலாலும் வேறுபட்டதாக ஒன்றேயாயும் பலவேயாயும் நிற்பதோர் தன்மையுடைத்து என்று கோடும் (கொள்ளுதும்), இறைவன் ஒன்றேயாய் நிற்குந்தன்மையும் பல்லுயிர்க்குந்தானேயாய் நிற்குந்தன்மை போல” எனவும் "இறைவன் இயங்குதினைக் கண்ணும் நிலைத்தினைக் கண்ணும் பிறவற்றின் கண்னும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தாற் போல அகரமும் உயிர்க்கண்ணும் தனிமெய்க் கண்ணும் கலந்து அவற்றின் தன்மையேயாய் நிற்கும் என்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்பமுடிந்தது. அகர முதல’