பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் . . .

431


கற்றுணர்ந்தும் கடவுள் திருவடியினைத் தொழாதார்க்கு அவர்கற்ற கல்வியறிவினாற் சிறிதும் பயனில்லை எனவும் அறிவுறுத்தும் முறையில் அமைந்தது,

“கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅ ரெனின்” (திருக். கட. வா. 2)

எனவரும் திருக்குறளாகும். எல்லாவற்றையும் இருந்தாங்கே உணரவல்ல முற்றுணர்வு ஞானமே திருமேனியாகவுடைய இறைவனொருவனுக்கேயுரிய தனிப்பண்பு என்பதனை "வாலறிவன்’ என்ற தொடராலும் உலகத்து உடம்பொடு கூடி வாழும் மக்கள் முதலிய உயிர்கள் யாவும் பிறர் அறிவித்தால் அறியும் சிற்றறிவுடையனவாதலின் மக்கள் தாம் பெற்ற கல்வியறிவாற்பயன் பேரறிவுப் பொருளாகிய இறைவன். திருவடிகளை வணங்கி அறிவினால் நிறைவு பெறுதலே என்பதனை 'இறைவன் நற்றாள் தொழாஅரெனின் கற்ற தனாலாய பயன் என் கொல்’ என்ற தொடராலும் திருவள்ளுவர் புலப்படுத்திய திறம் உய்த்துணரத் தகுவதாகும்.

அன்பினாற் கசிந்துருகிப் போற்றும் அடியார்களின் நெஞ்சத்தாமரையிலே சோதிப்பொருளாய்ச் சுடர்விட்டுத் தோன்றுதல் இறைவனது அருளின் நீர்மையாதலின் எல்லாம் வல்ல முதல்வனுக்கு மலர்மிசையேகினான்’ என்பது ஒரு திருப்பெயராயிற்று. நினைப்பவர் நெஞ்சத்தினைக் கோயிலாக் கொண்டெழுந்தருளிய இறைவனது நல்ல திருவடிகளை இடைவிடாது நினைந்து போற்றுவார் எல்லாவுலகிற்கும் மேலாகிய வீட்டுலகின்கண்ணே எக்காலத்தும் அழிவின்றி வாழ்வார் என அறிவுறுத்துவது,

"மலர்மிசையேகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் (திருக். கட. வா. 3)

எனவரும் திருக்குறளாகும். உயிர்க்குயிராய்ப் பிரிவின்றி (இரண்டறக்கலந்து) நிற்றல் இறைவனது இயல்பு என்பதனை 'மலர்மிசை யேகினான்’ என்னும் இத்தொடரால் திருவள்ளுவர் உய்த்துணர வைத்துள்ளமை உணர்தற் குரியதாகும். இறைவன் உலகுயிர்களோடு இரண்டறக்கலந்து