பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் . . .

443


பண்புகளாகச் சிவநெறிச் செல்வர் கூறும் எண்குனங் களையே இறைவனுக்குச் சிறப்புரிமையுடைய எண்குணங்க ளாக முதற்கண் எடுத்துரைத்தார் பரிமேலழகர். இனி திருவள்ளுவர் கூறும் கடவுள் வாழ்த்து எல்லாச் சமயத்தார்க்கும் பொதுவாக அமைந்ததாதலின் இதன்கண் கடவுளுக்குரிய பெயர்களாக ஆளப்பெற்ற ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை யேகினான், வேண்டுதல் வேண்டாமையிலான், இறைவன், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமையில்லாதான், அறவாழியந்தனன், எண்குனத்தான் என்னும் ஒன்பது திருப்பெயர்களுள் முதற்கண் உள்ள எட்டுப்பெயர்களால் அறிவுறுத்தப்பட்ட எட்டுக் குனங்களையே ஒன்பதாவது குறளில் எண்குணத்தான் என்ற பெயரால் திருவள்ளுவர் தொகுத்துக் கூறினார் எனக் கொள்ளுதல் ஏற்புடையதாகும்.

எண்குனத்தானாகிய இறைவனை வழிபட்டுப் பாசப்பினிப்பறுத்து வீடுபெறுதற்கென்றே அமைந்தது இம்மக்கட்பிறவியாகும். மனிதப்பிறவியின் நோக்கத்தினை யுனர்ந்து இறைவன் திருவடிகளைத் தலையால் வணங்கிப் போற்றாதாரது வாழ்வு பயனுடையதன்று எனத் திருவள்ளுவர் எதிர்மறைவாய் பாட்டாற்கூறிய இக் கருத்தினை உடன்பாட்டு முகத்தால் அறிவுறுத்துவதாக அமைந்தது திருநாவுக்கரசர் அருளிய தலையே நீவனங்காய்' என்னும் திருஅங்கமாலைத் திருப்பதிகமாகும்.

காரணகாரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றி வருவது பிறவிப்பிணிப்பாதலின் அது பிறவிப்பெருங்கடல் என உருவகித்துக் கூறப்படும். இறைவன் அடியாகிய புணையைப் பற்றினோர் பிறவியாகிய பெருங்கடலை எளிதின் நீந்திக் கடப்பர். இறைவன் திருவடியாகிய புனையின் துணை பெறாதார் அப்பெருங்கடலை நீந்தமாட்டாது அதனுள் வீழ்ந்து அழுந்துவர் என்பார்,

“பிறவிப்பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவனடிசேரா தார்” (திருக். கட வா. 10)

என்றார் திருவள்ளுவர். உலகியல்பை நினையாது