பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் . . .

445


முழுமுதற்பொருள் ஒன்றேயென வலியுறுத்துவது 'தனக்குவமையில்லாதான் என்ற தொடராகும். ஒருவன் என்னும் ஒருவனாகிய முதல்வனே பல்வகைப் பிறவியுட்பட்டு அல்லலுறும் மன்னுயிர்களின் மனக்கவலைகளை மாற்றி வாழ்வளிக்க வல்லவன் என்பது இக்குறளால் அறிவுறுத்தப் படும் தத்துவவுண்மையாகும். அறத்தின் கடலாகவும் அருள் வடிவினனாகவும் திகழ்வோன் இறைவன் என்பது 'அறவாழியந்தனன் என்ற பெயராற் புலனாகும். மன்னுயிர் களின் பொருட்டு உலகினைப் படைத்து வாழ்வளிக்கும் வினைமுதலாகவுள்ள முழுமுதற்பொருள் ஒரு குணமும் இல்லாத் வெறும் அறிவாக மட்டும்இருத்தல் இயலாது. அன்புடைய உயிர்களால் எண்ணிப் போற்றுதற்குரிய எல்லா நற்பண்புகளும் ஒருங்கே அமைந்த நல்ல குனிப்பொருளே என்று அறிவுறுத்துவார், இறைவனை எண்குணத்தான் என்ற பெயராற் குறித்தார் திருவள்ளுவர். இவ்வாறு திருக்குறள் முதலதிகாரத்தில் இறைவனைக் குறித்து வழங்கப்பெற்ற பெயர்கள்ாகிய தொடர்கள் யாவும் இறைவனது பொது வியல்பும் உண்மையியல்பும் ஆகிய இலக்கணங்களைச் சுருக்கமும் தெளிவும் பொருந்த விரித்துரைக்கும் நிலையில் அமைந்துள்ளமையும் இங்குத் திருவள்ளுவர் விரித்துக் கூறிய கடவுள் இலக்கணமே சைவ சித்தாந்த மெய்ந்நூல்கள் கூறும் பதியிலக்கணமாக அமைந்துள்ளமையும் திருக்குறளின் முதற்கண் அமைந்த கடவுள் வாழ்த்து என்னும் இவ்வதி காரத்தையும் உமாபதி சிவாசாரியார் இயற்றிய திருவருட்பயனின் முதற்கண் அமைந்த பதிமுதுநிலை என்னும் அதிகாரத்தினையும் ஒப்புநோக்குவார்க்கு நன்குபுலனாகும்.

தாம் கூறக்கருதிய அறங்களுக்கெல்லாம் நிலைக் களமாகத் திகழும் முழுமுதற் கடவுளை முதற்கண் வாழ்த்தி வனங்குதல் இன்றியமையாதென அறிவுறுத்திய திருவள்ளுவர் நம்மனோர் கண்கட்குப் புலனாகாது அருவாய்த் தத்துவங் கடந்து நிற்கும் தனி முதற்பொருளாகிய இறைவனது அருளின் நீர்மையாக வெளிப்பட்டுக் கைம்மாறு கருதாது உலகிற்குப் பயன்படி மழையினைப் பொழியும் வானத்தில் சிறப்பினையுணர்த்தும் பகுதி திருக்குறளில் உள்ள