பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


என வரும் திருக்குறளாகும். விபரீதவுணர்வாவது, மறுபிறப்பும் இருவினைப் பயனும் கடவுளும் இல்லை யெனவும் மற்றும் இத்தன்மையவுஞ்சொல்லும் மயக்கநூல் வழக்குகளை மெய்ந்நூல் வழக்கெனத் துணிதல். குற்றியை மகவென்றும் இப்பியை வெள்ளியென்றும் இவ்வாறே ஒன்றனைப் பிறிதொன்றாகத் துணிதலும் அது. மருள், மயக்கம், விபரீதவுணர்வு, அவிச்சையென்பன ஒருபொருட் கிளவி. நரகர், விலங்கு, மக்கள், தேவர் என்னும் நால்வகைப் பிறப்பினும் உள்ளது துன்பமேயாகலின் மானாப்பிறப்பு என்றார். இதனாற் பிறப்புத்துன்பம் என்பதும் அதற்கு முதற்காரனம் அவிச்சையென்பது உம் கூறப்பட்டன” என்பர் பரிமேலழகர்.

மயக்கவுணர்வின் நீங்கி மெய்யுணர்வுடைய ராயினார்க்கு அம்மெய்யுணர்வு எல்லாத் துன்பத்திற்குங் காரணமாயுள்ள ஆணவம் என்னும் அகவிருள் நீங்க வீட்டினைக் கொடுக்கும் என அறிவுறுத்துவது,

"இருணிங்கியின்பம் பயக்கும் மருணிங்கி

மாசறு காட்சியவர்க்கு” (திருக். 352)

எனவரும் திருக்குறளாகும். ஈண்டு இருள் என்றது, உயிர்கள் அடையும் எல்லாத் துன்பத்திற்கும் காரணமாயுள்ள ஆணவவல்லிருளை. 'இருளாயவுள்ளத்தின் இருளை நீக்கி’ என்பது அப்பரருள் மொழி. மருள் என்றது மயக்க வுணர்வினை. மாசறு காட்சியென்றது. மெய்ப்பொரு ளுணர்வினை. வீடென்பது உயர்வறவுயர்ந்த பேரின்பநிலை யென்பதும் அதனைப் பெறுதற்கு நிமித்த காரணம் மெய்ப்பொருளுணர்வென்பதும் இதனால் கூறப்பட்டன. இனி, இங்கு இருள் என்றது நரகத்தினையெனவும் அஃது ஆகுபெயராய் அதற்குக் காரணமாகிய பிறப்பின் மேல் நின்றதெனவும் கூறுவர் பரிமேலழகர். ஆசிரியர் திருவள்ளுவர் இருள் என்ற சொல்லினை ஆணவம் என்னும் அகவிருள் என்ற பொருளிலும் மருள் என்ற சொல்லினை மயக்கவுணர்வு என்ற பொருளிலும் ஆண்டுள்ளார் என்பது இருள்சேர் இருவினையுஞ்சேரா, "இருணிங்கியின்பம் பயக்கும்', 'மருளானாம் மாணாப்